தமிழக அரசு தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வுக்கு படிக்கக்கூடிய மாணவர்களுக்கான சிறந்த வழிகாட்டுதல்கள் மற்றும் இலவச பயிற்சி வகுப்புகளை எடுப்பதற்கான அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது.
இதன் மூலம் மாணவர்கள் பணம் கட்டி வெளியில் படிக்க முடியாமல் அவதிப்பட வேண்டாம் என்றும் தமிழ்நாடு அரசு சார்பில் நடத்தப்படும் இலவச பயிற்சி வகுப்பில் கலந்து கொண்ட பயனடையலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக கன்னியாகுமரி மாவட்ட ஆட்சி தலைவர் சில முக்கிய வழிகாட்டுதல்களை வெளியிட்டிருக்கிறார்.
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் வெளியிட்டிருக்க கூடிய செய்தி குறிப்பில் தெரிவித்திருப்பதாவது :-
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியத்தில் காலியாக இருக்கக்கூடிய 1200 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தமிழக அரசால் வெளியிடப்பட்டிருக்கிறது என்றும் இதில் ஏதாவது ஒரு இளங்கலை பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும் இதற்கான கடைசி நாள் மே 3 என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
https://www.inusrb.tn.gov.in/ என்ற தமிழ்நாடு அரசினுடைய அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சென்று காவல் சார ஆய்வாளர்கள் தேர்விற்கு எழுத தயாராகிக் கொண்டிருக்கும் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதற்கான இலவச பயிற்சி வகுப்புகள் நாகர்கோவிலில் ஏப்ரல் 23ஆம் தேதி புதன்கிழமை அன்று காலை 10:30 மணிக்கு நடைபெற இருப்பதால் இந்த இலவச பயிற்சி வகுப்பில் சேர நினைக்கக்கூடிய மாணவர்கள் விண்ணப்பித்த நகல் பாஸ்போர்ட் சைஸ் போட்டோ ஆதார் அட்டை நகல் என அனைத்தையும் எடுத்துக் கொண்ட நாகர்கோவில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்திற்கு நேரடியாக வருகை தர வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. முதலில் வரும் 100 நபர்களுக்கு மட்டுமே இலவச பயிற்சி நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.