இந்தியாவில் இருக்கக்கூடிய அனைத்து மக்களுக்கும் மிக முக்கியமான அட்டையாகவும் வங்கி கல்வி மருத்துவம் என எங்கு சென்றாலும் அனைத்து துறைகளிலும் முதலில் கேட்கப்படக்கூடிய அட்டையாகவும் ஆதார் அட்டை திகழ்ந்து வருகிறது. இப்படிப்பட்ட முக்கிய ஆவணத்தில் எத்தனை முறை மாற்றங்களை மேற்கொள்ளலாம் அதிலும் குறிப்பாக எதற்கு எத்தனை முறை மாற்றங்கள் அனுமதிக்கப்பட்டிருக்கிறது என்பது தெரியாமல் பலரும் தற்பொழுது தங்களுடைய ஆதார் அட்டைகளில் மாற்றங்களை செய்து வருகின்றனர். இது கட்டாயம் அனைவரும் அறிந்திருக்க வேண்டிய ஒரு தகவல்.
✓ பெயர் மாற்றம் :-
ஆதார் அடையாள அட்டையில் பயனர்கள் தங்களுடைய பெயரை 2 முறை மாற்ற முடியும். காரணம் திருமணம் ஆன பெண் பெண்கள் தங்களுடைய துணை பெயரை மாற்றுவதற்கு வசதியாக இது போன்ற ஒரு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.
✓ பிறந்த தேதி மாற்றம் :-
ஆதார் அட்டையில் பிறந்த தேதி தவறாக இருக்கிறது என்றால் அதனை 1 முறை மட்டுமே மாற்றிக் கொள்ள முடியும். அதற்கும் உரிய ஆவணங்களை சமர்ப்பித்த பின்பு தான் மாற்ற முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
✓ முகவரி மாற்றம் :-
ஆதார் அடையாள அட்டைகளை பொருத்தவரை எத்தனை முறை வேண்டுமானாலும் முகவரியை மாற்றிக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. காரணம் புதிய ஊர்களுக்கு குடிப்பெயர்ந்தால் அந்த ஊர்களுக்கு ஏற்றவாறு தங்களுடைய ஆதார் அட்டையில் முகவரியை மாற்றும் வகையில் இந்த ஏற்பாடானது மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது.
✓ மொபைல் எண் :-
ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்டிருக்கக்கூடிய மொபைல் எண்ணை பலமுறை மாற்றிக் கொள்வதற்கான அனுமதியும் ஓடிபி உள்ளீடு செய்து மாற்றிக் கொள்வதற்கான அனுமதியும் தபால் அலுவலகங்களில் வழங்கப்பட்டு வருகிறது.
✓ பாலினம் மாற்றம் :-
ஆதார் அட்டை பயனர்கள் தங்களுடைய பாலினத்தை ஒருமுறை மட்டுமே மாற்றிக்கொள்வதற்கான அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. அதுவும் தவறுதலாக ஆதார் கார்டு அப்டேட் செய்யும் பொழுது ஏதேனும் ஒரு திருத்தங்கள் இருப்பின் அதனை மாற்றுவதற்காக இந்த ஒரு முறை மாற்றமானது அனுமதிக்கப்பட்டிருக்கிறது.