உங்கள் இரத்த சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் இருக்க வெந்தயத்தை கொண்டு டீ செய்து குடிக்கலாம்.மருந்து,மாத்திரை இல்லாமல் சர்க்கரை அளவை கட்டுப்படுத்த இதுவே சிறந்த வழி.
வெந்தய ஊட்டச்சத்துக்கள்:
**இரும்புச்சத்து **நார்ச்சத்து **கால்சியம் **புரோட்டீன் **கார்போ ஹைட்ரேட் மற்றும் கனிம சத்துக்கள்
வெந்தயத்தில் அமினோ ஆசிட் என்ற வேதிப்பொருள் இருக்கின்றது.இது இரத்தத்தில் இன்சுலின் அளவை அதிகரிக்க உதவுகிறது.
வெந்தய டீ செய்முறை:
தேவையான பொருட்கள்:-
1)வெந்தயம் – ஒரு தேக்கரண்டு
2)தண்ணீர் – ஒரு கிளாஸ்
செய்முறை விளக்கம்:-
முதலில் ஒரு தேக்கரண்டி வெந்தயத்தை வாணலியில் போட்டு லேசாக வறுக்க வேண்டும்.வெந்தயம் பொன்னிறமாக வந்த அடுப்பை அணைத்துவிட வேண்டும்.
பிறகு வெந்தயத்தை மிக்சர் ஜாரில் போட்டு பவுடர் பதத்திற்கு அரைக்க வேண்டும்.அடுத்து அடுப்பில் பாத்திரம் ஒன்றை வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.
அதன் பின்னர் அரைத்த வெந்தயப் பொடியை அதில் போட்டு கொதிக்க வைக்க வேண்டும்.இந்த வெந்தய பானத்தை குடித்தால் இரத்த சர்க்கரை அளவு கட்டுப்படும்.
வெந்தயத்தை பொடித்து தினமும் காலையில் தேக்கரண்டி அளவு சாப்பிட்டு வந்தால் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் இருக்கும்.
வெந்தய பானத்தை தினமும் குடித்து வந்தால் உடலில் கெட்ட கொழுப்பு சேராமல் இருக்கும்.வெந்தயத்தை சாப்பிட்டு வந்தால் நீரிழிவு நோய் பாதிப்பு குணமாகும்.உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் அளவு குறைய வெந்தயத்தை பொடித்து டீ வைத்து குடிக்கலாம்.
வெந்தய டீ செய்து குடித்தால் தொப்பை பகுதியில் உள்ள கொழுப்பு கரையும்.வெந்தயத்தில் உள்ள இயற்கை குளிர்ச்சி உடல் சூட்டை தணிக்க உதவுகிறது.வெந்தய டீ குடித்தால் மலச்சிக்கல்,செரிமானப் பிரச்சனை போன்ற பாதிப்புகள் ஏற்படாமல் இருக்கும்.
வெந்தய டீ செய்து குடித்து வந்தால் வயிற்று வலி,வயிறு எரிச்சல்,அல்சர் போன்ற பாதிப்புகள் சீக்கிரம் குணமாகும்.