உடல் சூட்டை குறைக்கும் வெற்றிலை!! சூடு தணிய இந்த மாதிரி ஒருமுறை ட்ரை பண்ணுங்க!!

Photo of author

By Divya

உடல் சூட்டை குறைக்கும் வெற்றிலை!! சூடு தணிய இந்த மாதிரி ஒருமுறை ட்ரை பண்ணுங்க!!

Divya

வெயில் காலத்தில் உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள வெற்றிலையை அரைத்து ஜூஸ் செய்து பருகலாம்.குளிர் பானங்களுக்கு பதில் வெற்றிலையை அரைத்து சாறு எடுத்து பருகினால் உடல் ஆரோக்கியம் மேம்படும்.

தேவையான பொருட்கள்:-

1)வெற்றிலை – இரண்டு
2)பெருஞ்சீரகம் – ஒரு தேக்கரண்டி
3)தேங்காய் துருவல் – அரை கப்
4)கற்கண்டு – சிறிதளவு
5)குல்கந்து – ஒரு தேக்கரண்டி

செய்முறை விளக்கம்:-

முதலில் ஒரு வெற்றிலையை எடுத்து சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.பிறகு அரை கப் அளவிற்கு தேங்காய் துருவி வைத்துக் கொள்ள வேண்டும்.

அடுத்து அடுப்பில் வாணலி வைத்து ஒரு தேக்கரண்டி பெருஞ்சீரகத்தை போட்டு வறுக்க வேண்டும்.அடுத்து மிக்சர் ஜாரில் வெற்றிலையை போட்டுக் கொள்ள வேண்டும்.

பின்னர் வறுத்த பெருஞ்சீரகத்தை போட வேண்டும்.அதன் பிறகு துருவி வைத்துள்ள தேங்காயை கொட்டிக் கொள்ள வேண்டும்.அதன் பின்னர் ஒரு தேக்கரண்டிய் குல்கந்து மற்றும் தேவையான அளவு கற்கண்டு போட்டு தண்ணீர் ஊற்றி ஜூஸ் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.இந்த வெற்றிலை ஜூஸை கிளாஸிற்கு வடிகட்டி குடித்தால் உடல் சூடு தணியும்.

தேவையான பொருட்கள்:-

1)வெற்றிலை – ஒன்று
2)தண்ணீர் – ஒரு கிளாஸ்

செய்முறை விளக்கம்:-

முதலில் ஒரு வெற்றிலையை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.அதன் பிறகு மிக்சர் ஜாரில் வெற்றிலையை போட்டு ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி ஜூஸ் பதத்திற்கு அரைக்க வேண்டும்.இந்த வெற்றிலை ஜூஸை வடிகட்டி குடித்தால் உடல் சூடு முழுமையாக தணியும்.