வாழ்நாள் முழுவதும் 20 வயது தோற்றத்துடன் இருக்க.. இந்த ஒரு ஜூஸை தினமும் பருகலாம்!!

Photo of author

By Divya

வாழ்நாள் முழுவதும் 20 வயது தோற்றத்துடன் இருக்க.. இந்த ஒரு ஜூஸை தினமும் பருகலாம்!!

Divya

வாழைமரத்தில் இருந்து கிடைக்கும் பொருட்கள் அனைத்தும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்தவையாகும்.வாழைப்பழம்,வாழைப்பூ,வாழைத்தண்ட,வாழையிலை ஆகிய அனைத்தும் மருத்துவ குணங்கள் நிறைந்து காணப்படுகிறது.இதில் வாழைத்தண்டில் ஜூஸ்,சூப் செய்து குடித்து வந்தால் சருமம் சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் குணமாகும்.

வாழைத்தண்டு ஜூஸ் செய்வது எப்படி?

தேவையான பொருட்கள்:-

1)வாழைத்தண்டு – ஒரு கப்(பொடியாக நறுக்கியது)
2)சீரகம் – அரை தேக்கரண்டி
3)தண்ணீர் – ஒரு கப்

செய்முறை விளக்கம்:-

முதலில் ஒரு சிறிய வாழைத்தண்டு எடுத்து பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.இந்த வாழைத்தண்டை நான்கு முதல் ஐந்துமுறை சுத்தம் செய்து மிக்சர் ஜாரில் போட்டுக் கொள்ள வேண்டும்.

அடுத்து அதில் அரை தேக்கரண்டி சீரகத்தை போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி ஜூஸாக அரைக்க வேண்டும்.இந்த ஜூஸை வடிகட்டி சிறிது இந்துப்பு கலந்து பருகலாம்.

வாழைத்தண்டு ஜூஸ் செய்து குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்:

1.உடலில் நோய் எதிர்ப்பு பண்புகள் அதிகரிக்கும்.சருமம் பளபளப்பாக மாற வாழைத்தண்டு ஜூஸ் குடிக்கலாம்.

2.முகத்தில் உள்ள பருக்கள் நீங்க வாழைத்தண்டு ஜூஸ் செய்து பருகலாம்.சிறுநீரக கற்கள் நீங்க வாழைத்தண்டு ஜூஸ் செய்து குடிக்கலாம்.

3.உடலில் தேங்கும் நச்சுக் கழிவுகள் அகல வாழைத்தண்டு ஜூஸ் செய்து குடிக்கலாம்.சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்துக் கொள்ள வாழைத்தண்டு ஜூஸ் செய்து குடிக்கலாம்.

4.வாழைத்தண்டு ஜூஸ் உடலில் அலர்ஜி எதிர்ப்பு பண்புகளை அதிகரிக்க உதவுகிறது.தினமும் ஒரு கிளாஸ் வாழைத்தண்டு சாறு பருகினால் மலச்சிக்கல்,செரிமானப் பிரச்சனை,வாயுத் தொல்லை போன்ற பாதிப்புகள் குணமாகும்.

5.வாழைத்தண்டு ஜூஸ் குடித்தால் இரத்தத்தில் உள்ள கழிவுகள் அகலும்.டீ,காபிக்கு பதில் வாழைத்தண்டு சாறு குடித்தால் உடல் ஆரோக்கியம் மேம்படும்.வாழைத்தண்டு ஜூஸ் குடித்தால் தோல் சுருக்கம் வராமல் இருக்கும்.அதேபோல் வாழைத்தண்டில் சூப் செய்து குடித்தால் உடல் ஆரோக்கியம் மேம்படும்.