இரத்த சர்க்கரை அளவு கட்டுப்பட கீழா நெல்லி,பாகல்,கோவைக்காய் ஆகியவற்றை கொண்டு ஜூஸ் செய்து சாப்பிடலாம்.
தேவையான பொருட்கள்:-
கீழாநெல்லி ஜூஸ்
தேன்
செய்முறை விளக்கம்:-
முதலில் ஒரு கைப்பிடி கீழாநெல்லி இலையை பாத்திரத்தில் போட்டு தண்ணீர் ஊற்றி அலசி சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.பிறகு இதை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் மிக்சர் ஜாரில் கீழாநெல்லி இலையை போட்டு ஒரு கப் தண்ணீர் ஊற்றி ஜூஸ் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.இந்த கீழாநெல்லி சாறை கிண்ணத்திற்கு வடிகட்டி பருகினால் சர்க்கரை நோய் குணமாகும்.
கீழாநெல்லி ஜூஸ் ஜூஸ் கசப்பாக இருக்கும்.அதிக கசப்பு சுவை விரும்பாதவர்கள் சிறிதளவு தேன் கலந்து குடிக்கலாம்.இப்படி தொடர்ந்து குடித்தால் சர்க்கரை நோய் பாதிப்பு குணமாகும்.
தேவையான பொருட்கள்:-
1)கோவைக்காய் – நான்கு
2)தண்ணீர் – ஒரு கப்
செய்முறை விளக்கம்:-
முதலில் நான்கு கோவைக்காயை தண்ணீர் விட்டு சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.பின்னர் அதை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.
இதை மிக்சர் ஜாரில் இந்த கோவைக்காயை போட்டு ஒரு கப் தண்ணீர் ஊற்றி ஜூஸ் பதத்திற்கு அரைக்க வேண்டும்.இந்த கோவைக்காய் ஜூஸை கிளாஸிற்கு வடிகட்டி குடித்தால் இரத்த சர்க்கரை அளவு கட்டுப்படும்.
தேவையான பொருட்கள்:-
1)பாகற்காய் – ஒன்று
2)தண்ணீர் ஒரு கப்
செய்முறை விளக்கம்:-
முதலில் ஒரு முழு பாகற்காய் எடுத்து அதன் விதையை நீக்கிவிட்டு சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.இதை மிக்சர் ஜாரில் போட்டு தண்ணீர் ஊற்றி ஜூஸ் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.இந்த பாகற்காய் ஜூஸை குடித்தால் இரத்த சர்க்கரை அளவு கட்டுப்படும்.