உங்கள் குழந்தை என்ன சாப்பிட்டாலும் வெயிட் போட மாட்டேங்குறாங்களா? இதுதான் காரணம்!!

சிலர் அளவாக சாப்பிட்டாலும் உடல் எடை கூடிவிடுவார்கள்.ஆனால் சிலர் வயிறு முட்ட சாப்பிட்டாலும் உடல் எடை ஏறாமல் நோஞ்சான் போன்று ஒல்லியாக இருப்பார்கள்.இதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கலாம்.உணவை பொறுத்து குழந்தைகளின் உடல் எடையை நிர்ணயிக்க முடியாது.குழந்தை உடல் எடை அதிகரிக்காமல் இருக்க சில நோய் பாதிப்புகள் காரணமாக இருக்கலாம்.

குழந்தைகள் உடல் எடை அதிகரிக்காமல் இருக்க காரணம்:

1)குடல் புழு பிரச்சனை இருந்தால் குழந்தைகள் உடல் எடை கூடாமல் இருப்பார்கள்.எனவே குடல் புழுக்களை வெளியேற்ற கசப்பு நிறைந்த பொருட்களை சாப்பிடக் கொடுக்கவும்.வேப்பிலை,பாகல் இலை போன்றவற்றை ஜூஸாக அரைத்து குடிக்க கொடுக்க வேண்டும்.

2)மிகவும் குறைவான கலோரி நிறைந்த உணவுகளை சாப்பிடும் குழந்தைகள் உடல் எடை கூடாமல் இருப்பர்.

3)இரத்த சோகை பாதிப்பு இருக்கும் குழந்தைகள் உடல் எடை அதிகரிக்க மாட்டார்கள்.தைராய்டு பாதிப்பு இருக்கும் குழந்தைகள் உடல் எடை அதிகரிக்க மாட்டார்கள்.

4)ஹார்மோன் சம்மந்தப்பட்ட பிரச்சனை இருக்கும் குழந்தைகள் ஒல்லியாக இருப்பார்கள்.உடல் வளர்ச்சி இல்லாத குழந்தைகள் எடை கூடாமல் இருப்பார்கள்.

5)உடல் உயரம் அதிகமாக இருக்கும் குழந்தைகள் உடல் எடை குறைவாக இருப்பார்கள்.உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும் குழந்தைகள்,அடிக்கடி நோய்வாய்ப்படும் குழந்தைகள் உடல் எடை தேறமாட்டார்கள்.

குழந்தைகள் உடல் எடையை அதிகரிக்க புரதம் மற்றும் ஆரோக்கிய கொழுப்பு நிறைந்த உணவுகளை கொடுக்கலாம்.பாதாம் பருப்பு,புரதம் நிறைந்த உணவுகள் ஆகியவற்றை சாப்பிடக் கொடுக்கலாம்.வேர்கடலை மற்றும் கொண்டைக்கடலையை பொடித்து கஞ்சி செய்து கொடுத்தால் குழந்தைகள் உடல் எடை அதிகரிக்கும்.

வாழைப்பழத்தை பாலில் ஊறவைத்து சாப்பிடக் கொடுக்கலாம்.பாலில் தேன் கலந்து கொடுத்தால் குழந்தைகள் உடல் எடை அதிகரிக்கும்.தினமும் ஒரு வேகவைத்த முட்டை சாப்பிடக் கொடுக்கலாம்.இப்படி குழந்தையின் உடல் எடையை இயற்கை முறையில் அதிகரிக்கலாம்.