இந்த 06 அறிகுறிகள் இருந்தால்.. உங்கள் கல்லீரல் டேமேஜ் ஆகிவிட்டது என்று அர்த்தம்!!

Photo of author

By Divya

இந்த 06 அறிகுறிகள் இருந்தால்.. உங்கள் கல்லீரல் டேமேஜ் ஆகிவிட்டது என்று அர்த்தம்!!

Divya

நம் உடலில் அதிக வேலை செய்யும் உறுப்பு என்றால் அது கல்லீரலாகதான் இருக்கும்.நமது கல்லீரல் ஆரோக்கியம் சேதமாகிவிட்டதை சில அறிகுறிகள் வைத்து தெரிந்து கொள்ளலாம்.கல்லீரல் சேதமானால் பாதத்தில் வீக்கம் ஏற்படும்.இது முக்கிய அறிகுறியாக பார்க்கப்படுகிறது.

கல்லீரல் சேதமாகிவிட்டதை ஆரம்ப நிலையில் கண்டறிவது கடினம்.கல்லீரல் சேதமாகிவிட்டது உறுதியானால் உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை பெற்றுக் கொள்ள வேண்டும்.

கல்லீரல் சேத அறிகுறிகள்:

1)மஞ்சள் காமாலை
2)குமட்டல்
3)வாந்தி
4)பசியின்மை
5)வயிற்று வலி
6)சிறுநீர் நிறத்தில் மாற்றம்
7)இரத்தம் கலந்த சிறுநீர் வெளியேறுதல்
8)உடல் சோர்வு
9)கணுக்கால் வீக்கம்
10)வயிறு வீக்கம்

சேதமான கல்லீரலை சரிசெய்யும் வீட்டு வைத்தியங்கள்:

**ஆப்பிள் சீடர் வினிகர்

ஒரு கிளாஸில் வெது வெதுப்பான தண்ணீர் ஊற்றிக் கொள்ள வேண்டும்.அடுத்து அதில் ஒரு தேக்கரண்டி ஆப்பிள் சீடர் வினிகர் ஊற்றி நன்றாக கலந்து பருக வேண்டும்.ஆப்பிள் சீடர் வினிகர் பானம் கல்லீரலில் தேங்கிய கழிவுகளை அகற்ற உதவுகிறது.

**பெரிய நெல்லிக்காய்

ஒரு முழு நெல்லிக்காயை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள்.பிறகு இதை அரைத்து ஜூஸ் செய்து குடித்தால் கல்லீரலில் தேங்கிய கழிவுகள் வெளியேறும்.கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்த நெல்லிக்காய் ஜூஸ் பருகலாம்.

**அதிமதுரம்

நாட்டு மருந்து கடையில் அதிமதுரம் கிடைக்கும்.இதை பொடித்து வைத்துக் கொள்ள வேண்டும்.பாலில் இந்த அதிமதுரப் பொடியை போட்டு குடித்தால் கல்லீரல் ஆரோக்கியம் மேம்படும்.

**ஆளிவிதை

ஒரு கிளாஸ் தண்ணீரில் ஒரு தேக்கரண்டி ஆளிவிதை போட்டு ஊறவைத்து சாப்பிட்டு வந்தால் கல்லீரல் ஆரோக்கியம் மேம்படும்.

**மஞ்சள்

ஒரு கிளாஸ் வெது வெதுப்பான தண்ணீரில் சிட்டிகை அளவு மஞ்சள் தூள் கலந்து குடித்தால் கல்லீரலில் தேங்கிய கழிவுகள் வெளியேறும்.