கல்லீரலில் கொழுப்பு படிய என்ன காரணம்!! இதை தவிர்க்க சிறந்த வழிகள் இதோ!!

Photo of author

By Divya

கல்லீரலில் கொழுப்பு படிய என்ன காரணம்!! இதை தவிர்க்க சிறந்த வழிகள் இதோ!!

Divya

நமது உடலின் மிகப்பெரிய உறுப்பு கல்லீரல்.இந்த உறுப்பில் கொழுப்பு சேர்ந்தால் அவை சீக்கிரம் ஆரோக்கியத்தை இழந்துவிடும்.கல்லீரலில் கொழுப்பு படிய நாம் செய்யும் தவறுகளே காரணம்.கல்லீரலில் கொழுப்பு குவிந்தால் வயிறு வீக்கம்,தோல் அரிப்பு,தோல் எரிச்சல் போன்ற பாதிப்புகள் ஏற்படும்.

கல்லீரலில் கொழுப்பு குவிந்தால் உயர் இரத்த அழுத்தம்,உடல் பருமன்,நீரிழிவு போன்ற பாதிப்புகளை சந்திக்க நேரிடுகிறது.கல்லீரல் கொழுப்பு வகைகளில் இரண்டு வகைகள் இருக்கிறது.ஆல்கஹால் அல்லாத கொழுப்பு கல்லீரல்,ஆல்கஹால் கொழுப்பு கல்லீரல்.மது அருந்தவதால் கல்லீரலில் கொழுப்பு படிகிறது.இதை ஆல்கஹால் கொழுப்பு கல்லீரல் என்று அழைக்கின்றோம்.அதேபோல் ஆல்கஹால் அருந்தாமல் கல்லீரலில் கொழுப்பு படிவதை ஆல்கஹால் அல்லாத கொழுப்பு கல்லீரல் என்று அழைக்கின்றோம்.

கொழுப்பு கல்லீரல் நோய் அறிகுறிகள்:

1)உடல் பருமன்

2)உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் அதிகம் படிதல்

3)உயர் இரத்த அழுத்தம்

4)மாதவிடாய் முதிர்ச்சி

5)தொப்பை கொழுப்பு

கொழுப்பு கல்லீரலுக்கான காரணங்கள்:

1)கெட்ட கொழுப்பு

2)நீரிழிவு நோய்

3)மருந்து பக்க விளைவுகள்

கல்லீரல் கொழுப்பை கரைக்க மூலிகை வைத்தியம்:

தேவைப்படும் பொருட்கள்:

**ஒரு தேக்கரண்டி சீரகம்
**ஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாறு
**ஐந்து புதினா இலைகள்
**அரை லிட்டர் தண்ணீர்

செய்முறை விளக்கம்:

பாத்திரத்தில் அரை லிட்டர் தண்ணீர் ஊற்றிக் கொள்ள வேண்டும்.அடுத்து அதில் ஒரு தேக்கரண்டி சீரகத்தை போட்டுக் கொள்ள வேண்டும்.

அதன் பிறகு ஐந்து புதினா இலைகள் மற்றும் அரை எலுமிச்சை சாறை அதில் பிழிந்து ஒரு மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.இந்த பானத்தை குடித்து வந்தால் கல்லீரலில் படிந்துள்ள கொழுப்பு கரைந்துவிடும்.