குழந்தையின் மெமரி பவர் அதிகரிக்க.. இந்த எண்ணையை காலில் தேய்த்துவிடுங்கள்!!

Photo of author

By Divya

குழந்தையின் மெமரி பவர் அதிகரிக்க.. இந்த எண்ணையை காலில் தேய்த்துவிடுங்கள்!!

Divya

வளரும் குழந்தைகளுக்கு மூளை செயல்திறன் அதிகமாக இருக்க வேண்டும்.ஞாபக சக்தி மேம்பட குழந்தைகளுக்கு ஆரோக்கியமான உணவுகளை வழங்க வேண்டும்.படிக்கும் குழந்தைகளுக்கு ஞாபக திறன் அதிகரிக்க மூளை செல்களின் வளர்ச்சியை ஊக்குவிக்க ஊட்டச்சத்து நிறைந்த உணவுகள் அவசியம்.

ஒமேகா 3 கொழுப்பு அமில உணவுகள் மூளை செயல்திறனை மேம்படுத்த உதவுகிறது.பாதாம்,வால்நட்,கீரை மற்றும் காய்கறிகளை உணவில் சேர்த்துக் கொண்டால் மூளை செயல்திறன் மேம்படும்.இது தவிர குழந்தைகளின் மூளை செயல்திறனை மேம்படுத்தும் செயல்பாடுகளை ஊக்குவிக்க வேண்டும்.

சிறு வயதில் மூளை செயல்திறன் அதிகரிக்க உலர் விதைகளை ஊறவைத்து சாப்பிடலாம்.வால்நட் மூளையின் செயல்திறனை மேம்படுத்த உதவும்.வால்நட்டை லேசாக வறுத்து தேனில் ஊறவைத்து சாப்பிட்டு வந்தால் மூளை ஆரோக்கியம் மேம்படும்.

வால்நட்டை பொடித்து பாலில் கலந்து குடிக்கலாம்.தினமும் ஐந்து பாதாம் பருப்பை ஊறவைத்து சாப்பிட்டு வந்தால் மூளை செயல்திறன் மேம்படும்.புரதச்சத்து நிறைந்த முட்டையை வேகவைத்து சாப்பிட்டு வந்தால் மூளை செயல்திறன் மேம்படும்.ஒமேகா 3 கொழுப்பு அமிலம நிறைந்த மீனை அடிக்கடி உணவாக சாப்பிட்டு வந்தால் மூளை செயல்திறன் மேம்படும்.

தினமும் ஒரு கிளாஸ் பால் குடித்தால் மூளை செயல்திறன் அதிகரிக்கும்.பாலில் கால்சியம்,புரதம் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது.அதேபோல் பாதங்களில் தேங்காய் எண்ணெய் மசாஜ் செய்தால் குழந்தைகளின் மூளை செயல்திறன் மேம்படும்.

சிறிதளவு தேங்காய் எண்ணையை பாத்திரத்தில் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.தேங்காய் எண்ணெய் சிறிது சூடானதும் அடுப்பை அணைத்துவிட வேண்டும்.

பின்னர் தேங்காய் எண்ணெய் இளஞ்சூடு பக்குவத்திற்கு வந்த பின்னர் உள்ளங்காலில் தேய்த்துவிட வேண்டும்.இப்படி செய்தால் மூளை நரம்புகள் சுறுசுறுப்படையும்.தினமும் இரவு நேரத்தில் தேங்காய் எண்ணையை கால் பாதங்களில் மசாஜ் செய்து வந்தால் ஞாபக சக்தி அதிகரிக்கும்.