நாம் சீரான உணவுகளை சாப்பிட்டால் உடல் ஆரோக்கியம் மேம்படும்.உணவில் கால்சியம்,நல்ல கொழுப்பு,ஒமேகா 3 கொழுப்பு அமிலம்,வைட்டமின்கள் நிறைந்திருக்க வேண்டும்.அதேபோல் புரதச்சத்து அதிகமாக நிறைந்திருக்க வேண்டும்.
உடல் இயக்கத்திற்கு புரதச்சத்து அவசியமான ஒன்றாகும்.உடலில் செல் வளர்ச்சி அதிகரிக்க புரத உணவுகளை உட்கொள்ளலாம்.தசைகளின் வலிமை அதிகரிக்க புரத உணவுகளை உட்கொள்ளலாம்.புரதம் அசைவ உணவான கோழி இறைச்சி,ஆட்டிறைச்சி,மீன் போன்றவற்றில் மட்டுமே உள்ளது என்று பெரும்பாலானோர் நினைத்துக் கொண்டிருக்கின்றனர்.ஆனால் அசைவ உணவைவிட சைவ உணவில்தான் அதிக புரதம் நிறைந்து காணப்படுகிறது.
அதிக புரத சத்துக்கள் நிறைந்த 5 உணவுகள்:-
1)வேர்க்கடலை
உடலுக்கு தேவையான புரதச்சத்து வேர்க்கடலையில் இருக்கின்றது.100 கிராம் வேர்க்கடலையில் 15 கிராம் புரதம் நிறைந்து காணப்படுகிறது.
2)சோயா ஜங்க்ஸ்
சோயா பருப்பில் இருந்து தயாரிக்கப்படும் சோயா ஜங்க்ஸை சாப்பிட்டால் உடலுக்கு தேவையான புரதச்சத்து கிடைக்கும்.சோயா ஜங்க்ஸை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் உடலில் புரதம் அதிகரிக்கும்.
3)பச்சை பயறு
இதில் புரதச்சத்து அதிகமாக நிறைந்து காணப்படுகிறது.பச்சை பயறை மூளைக்கட்டி சாப்பிட்டு வந்தால் உடலுக்கு தேவையான புரதச்சத்து கிடைக்கும்.
4)பன்னீர்
பால் பொருட்களில் ஒன்றான பன்னீர் உடலுக்கு தேவையான புரதத்தை வழங்குகிறது.பன்னீரில் கிரேவி,பன்னீர் பட்டர் மசாலா,ப்ரை,பிரியாணி போன்றவற்றை செய்து சாப்பிட்டு வந்தால் உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும்.
5)டோபோ
கிட்டத்தட்ட பன்னீர் போன்ற தோற்றத்தை கொண்டிருக்கும் டோபோவில் ஏகப்பட்ட புரதச்சத்து நிறைந்து காணப்படுகிறது.இதை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் உடலுக்கு தேவையான புரதம் கிடைக்கும்.
இது தவிர கொண்டைக்கடலை,முந்திரி,ராஜ்மா,சோயா,ஆளிவிதை,சியா விதை போன்றவற்றில் அதிக புரதம் நிறைந்திருக்கிறது.