சிறுநீரக கல் பிரச்சனை இருப்பவர்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ள வீட்டு வைத்தியத்தை பின்பற்றி உரிய பலனை அடையுங்கள்.
சிறுநீரக கல் காரணங்கள்:-
1.உடலுக்கு தேவையான தண்ணீர் பருகாமை
2.உணவில் அதிக உப்பு சேர்த்துக் கொள்ளுதல்
3.தைராய்டு பிரச்சனை
4.உடல் பருமன்
5.உடல் உழைப்பு இல்லாமை
6.அதிக கால்சியம் நிறைந்த உணவுகள்
சிறுநீரக கல் அறிகுறிகள்:
1.சிறுநீர் கழிக்கும் பொழுது வலி
2.சிறுநீர் கழிக்கும் பொழுது எரிச்சல்
3.வாந்தி உணர்வு
4.குமட்டல் உணர்வு
5.சிறுநீர் மஞ்சள் நிறத்தில் வெளியேறுதல்
6.இடுப்பு பகுதியில் வலி
7.வயிற்று வலி
சிறுநீரக கல் கரைய வீட்டு வைத்தியம்:
தேவையான பொருட்கள்:-
1)ஆப்பிள் சீடர் வினிகர் – ஒரு தேக்கரண்டி
2)தண்ணீர் – ஒரு கிளாஸ்
செய்முறை விளக்கம்:-
அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.ஒரு நிமிடத்திற்கு பிறகு தண்ணீரை கிளாஸிற்கு ஊற்றிக் கொள்ள வேண்டும்.
அடுத்து அதில் ஒரு தேக்கரண்டி ஆப்பிள் சீடர் வினிகர் சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்ய வேண்டும்.இந்த ஆப்பிள் சீடர் வினிகர் பானத்தை பருகி வந்தால் சிறுநீரகத்தில் கற்கள் கரையும்.
தேவையான பொருட்கள்:-
1)தண்ணீர் – ஒரு கிளாஸ்
2)எலுமிச்சை சாறு – ஒரு தேக்கரண்டி
3)ஆலிவ் ஆயில் – அரை தேக்கரண்டி
செய்முறை விளக்கம்:-
அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.இந்த நீரை கிளாஸிற்கு ஊற்றி ஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாறு மிக்ஸ் செய்ய வேண்டும்.
அடுத்து அதில் அரை தேக்கரண்டி ஆலிவ் ஆயில் மிக்ஸ் செய்து பருகி வந்தால் சிறுநீரக கல் கரையும்.
தேவையான பொருட்கள்:-
1)துளசி சாறு – ஒரு தேக்கரண்டி
2)தண்ணீர் – ஒரு கிளாஸ்
செய்முறை விளக்கம்:-
முதலில் இரண்டு தேக்கரண்டி அளவு துளசி இலைகளை எடுத்து உரலில் போட்டு இடித்து சாறு எடுத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு கிளாஸில் வெது வெதுப்பான தண்ணீர் ஊற்றி துளசி சாறை அதில் கலந்து குடித்தால் சிறுநீரக கல் கரையும்.