நாம் சமையலுக்கு பயன்படுத்தும் உப்பு வெறும்.எப்சம் என்று சொல்லப்படும் மெக்னீசியம் உப்பு வேறு.இந்த எப்சம் உப்பு மெக்னீசியம்,ஆக்ஸிஜன்,சல்பர் போன்ற இராசயங்களை கொண்டிருக்கிறது.எப்சம் உப்பு பயன்படுத்துவதால் உடலுக்கு என்னவித நன்மைகள் கிடைக்கும் என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்ளுங்கள்.
எப்சம் உப்பு நன்மைகள்:
1)தண்ணீரில் எப்சம் கலந்து குளித்தால் தோல் எரிச்சல் பிரச்சனை நீங்கும்.உடலில் இருக்கின்ற இறந்த செல்கள் நீங்க எப்சம் உப்பை குளிக்கும் நீரில் கலந்து பயன்படுத்தலாம்.
2)வெது வெதுப்பான தண்ணீரில் சிறிது எப்சம் உப்பு கலந்து குளித்தால் மலச்சிக்கல் பிரச்சனை சரியாகும்.
3)குளிக்கும் நீரில் எப்சம் உப்பு உபயோகித்தால் சருமம் மிருதுவாக மாறும்.தோல் அலர்ஜி,தோல் தடிப்பு பிரச்சனை சரியாக எப்சம் உப்பை பயன்படுத்தலாம்.
4)வெது வெதுப்பான தண்ணீரில் எப்சம் உப்பு கலந்து தசைகளுக்கு ஒத்தடம் கொடுத்தால் தசைகள் வலிமை அதிகரிக்கும்.
5)முடக்கு வாதம்,சொரியாட்டிக் ஆர்த்ரிடிஸ் பிரச்சனை இருப்பவர்கள் எப்சம் உப்பு பயன்படுத்தினால் நல்ல பலன் கிடைக்கும்.
6)எப்சம் உப்பு பயன்படுத்தினால் மன அழுத்தம் குறையும்.எப்சம் உப்பு பயன்படுத்தி வந்தால் நமது சரும அழகு மேம்படும்.
எப்சம் உப்பு பயன்படுத்துவது எப்படி?
பாத்திரம் ஒன்றில் தண்ணீரில் நிரப்பு இரண்டு கப் எப்சம் உப்பு சேர்க்க வேண்டும்.இந்த உப்பு கரைந்த பின்னர் குளிக்க பயன்படுத்தலாம்.