இந்தியாவில் வசித்து வரக்கூடிய அமெரிக்க பெண்ணான கிறிஸ்டன் பிஷ்ஷர் என்பவர் அமெரிக்கா மற்றும் இந்தியா இடையே சுகாதார கட்டமைப்பு எவ்வாறு இருக்கிறது என்றும் இதில் காத்திருக்கக்கூடிய நேரம் செலவுகள் காப்பீடு போன்றவற்றை ஒப்பீடு செய்த எங்கு மருத்துவம் எளிமையாகவும் சிறந்ததாகவும் அமைகிறது என்பதை விளக்கி இருக்கிறார்.
இந்தியாவில் இருக்கக்கூடிய அமெரிக்க பெண் தெரிவித்திருக்கும் உண்மைகள் பின்வருமாறு :-
பொதுவாக அனைவரின் உடைய மனநிலையும் அமெரிக்காவில் சிறந்த மருத்துவம் கிடைக்கிறது என்பதை சொல்லிக் கொண்டே இருக்கும் ஆனால் உண்மை அப்படி இல்லை. நேரடியாக அமெரிக்காவில் இருப்பவர்களை கேட்கும் பொழுது அங்கு என்ன நடக்கிறது என்பது நமக்கு ஓரளவு புரிந்துவிடும். முதலில் இரு நாட்டு மருத்துவமனைகளிலும் இருக்கக்கூடிய மருத்துவர்களை பார்க்க வேண்டும் என்றால் அவர்களுக்கான காத்திருப்பு நேரம் எவ்வாறு அமையும் என்பதை பார்க்கலாம்.
காத்திருப்பு நேரம் :-
✓ அமெரிக்காவில் மருத்துவரை பார்க்க வேண்டும் என்றால் 2 முதல் 4 வாருங்கள் வரை காத்திருக்க வேண்டும். ஆனால் இந்தியாவைப் பொறுத்தவரை அப்படி கிடையாது உடல்நிலை சரியில்லை என்றால் மருத்துவமனைக்கு சென்று ஆனால் இந்தியாவைப் பொறுத்தவரை அப்படி கிடையாது உடல்நிலை சரியில்லை என்றால் மருத்துவமனைக்கு சென்று டோக்கன் பெற்று சிறிது நேரத்திலேயே மருத்துவரை நம்மால் பார்த்து விட முடியும்.
செலவுகள் :-
✓ இந்தியாவில் ஒரு மருத்துவரை சந்திக்க செல்கிறோம் என்றால் அதிகபட்சமாக 500 ரூபாய் முதல் 1500 ரூபாய் வரை செலவாகும். ஆனால் அமெரிக்காவை பொறுத்தவரை ஒரு டாக்டர் செக்கப் இருக்கு 12 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை செலவாகும். செலவு அதிகம் இருப்பதாலேயே அமெரிக்கர்கள் பெரும்பாலும் தங்களுடைய உடல் நிலை மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டால் மட்டுமே மருத்துவர்களிடம் செல்வார்களாம்.
பெட் சார்ஜ் :-
✓ மருத்துவமனைகள் தங்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் இந்தியாவில் சராசரியாக ஒரு நாளுக்கு பெட் சார்ஜ் என 6000 ரூபாய் செலவாகும் பட்சத்தில் அமெரிக்காவில் ஒருநாள் நீங்கள் மருத்துவமனையில் தங்க வேண்டும் என்றால் 2.5 லட்சம் செலவாகும் என தெரிவித்துள்ளார்.
காப்பீடு :-
✓ இந்தியாவில் அதிக அளவு மக்கள் தொகை இருப்பதால் இங்கு காப்பீட்டின் செலவும் மிக மிக குறைவாக இருக்கிறது. அதிலும் தனியார் மருத்துவ காப்பீடுகள் எடுக்கும் பொழுது ஒரு மாதத்திற்கு 2000 முதல் 5000 வரை செலவு செய்தாலே போதும் என்ற நிலை உள்ளதாகவும் ஆனால் அமெரிக்காவில் மருத்துவ காப்பீட்டிற்காக ஒரு மாதத்திற்கு 64,000 முதல் 1.2 லட்சம் ரூபாய் வரை செலவு செய்ய வேண்டும் என்றும் இவ்வாறு செலவு செய்தால் கூட மருத்துவமனைக்கு சென்று அட்மிட் ஆகும் பட்சத்தில் கையில் இருந்தும் பணம் போட வேண்டும் என தெரிவிப்பது அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.