ஏப்ரல் 22 ஆம் தேதி காஷ்மீரில் இருக்கக்கூடிய பஹல் காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் அங்கிருந்த ரெசார்ட் ஒன்றில் தங்கி இருந்த 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். அதனைத் தொடர்ந்து 18 பேர் பலத்த காயம் அடைந்தனர். இதற்கு இந்தியா முழுவதும் மட்டுமல்லாது உலகம் முழுவதும் இருந்து எதிர்ப்புகள் கிளம்பியுள்ள நிலையில் பிரதமர் மோடி அவர்கள் ஐந்து முக்கிய நடவடிக்கைகளை பாகிஸ்தானுக்கு எதிராக முன்னெடுத்திருக்கிறார்.
நம் நாட்டில் தடை செய்யப்பட்ட மற்றும் பாகிஸ்தானிலிருந்து செயல்படக் கூடிய லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பின் தி ரெசிஸ்டெண்ட் ஃப்ரண்ட் என்ற பயங்கரவாத அமைப்பானது காஷ்மீரில் இறந்த துப்பாக்கிச் சூடுக்கு பொறுப்பேற்றுள்ளது. இதனால் கோபம் அடைந்த பிரதமர் மோடி அவர்கள் பாகிஸ்தானுக்கு எதிராக சில முக்கியமான முடிவுகளை வெளியிட்டு இருக்கிறார்.
பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியாவால் மேற்கொள்ளப்பட்ட 5 முக்கிய முடிவுகள் :-
✓ 1960 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையேயான சிந்து நதிநீர் ஒப்பந்தம் முழுவதுமாக தடை செய்யப்படுகிறது என தெரிவிக்கிறார்.
✓ பாகிஸ்தானில் எல்லையாக பஞ்சாப் மாநிலத்தில் உள்ள அட்டேரி பகுதியில் இருக்கக்கூடிய சோதனை சாவடி முழுவதுமாக மூடப்படுவதாகவும் எல்லை வழியாக நாடு தாண்டி சென்றவர்கள் மே 1ஆம் தேதிக்குள் அவரவர் சொந்த நாட்டிற்கு செல்ல வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது.
✓ இந்தியாவில் இருக்கக்கூடிய முப்படை தலைவர்களும் ஒரு வாரத்திற்குள் தங்களுடைய சொந்த நாட்டிற்கு திரும்ப வேண்டும் என்றும் அதேபோல பாகிஸ்தானில் இருக்கக்கூடிய இந்திய முப்படை தூதர்கள் உடனடியாக இந்தியாவிற்கு திரும்பி வரவேண்டும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
✓ டெல்லியில் இருக்கக்கூடிய பாகிஸ்தான் தூதரகத்தில் 55 பேர் பணியாற்றி வரும் நிலையில் உடனடியாக அவர்களின் எண்ணிக்கையை 30 ஆக குறைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
✓ பாகிஸ்தானியர்கள் இந்தியாவிற்குள் நுழைவதற்காக இந்தியாவால் உருவாக்கப்பட்ட SEVS முழுவதுமாக நிறுத்தப்படுவதாகவும் இந்த விசாவின் மூலமாக இந்தியாவிற்குள் நுழைந்த பாகிஸ்தானியர்கள் 48 மணி நேரத்திற்குள் தங்களுடைய சொந்த நாட்டிற்கு சென்று விட வேண்டும் என்று எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.