கடந்த 6 மாதங்களாக தொடர்ந்து உயர்த்தப்பட்டு வந்த பாலின் விலையானது தற்பொழுது இரண்டு முறை குறைக்கப்பட்டு இருக்கிறது. இதுவரை ஒரு லிட்டர் பாலுக்கு 4 ரூபாய் குறைக்கப்பட்டு இருப்பது மக்களை மகிழ்ச்சி அடைய செய்திருக்கிறது.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் ஒருமுறை, இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் ஒரு முறை மற்றும் மார்ச் மாதத்தில் ஒரு முறை என தொடர்ந்து 3 முறை உயர்த்தப்பட்ட பாலின் விலையால் பொதுமக்கள் மட்டுமல்லாத சில்லறை வியாபாரம் செய்யக்கூடிய கடைக்காரர்களும் மிகப்பெரிய அளவில் பாதிப்பை சந்தித்தனர். முதன்முதலில் ஹட்சன் நிறுவனமானது பாலில் உயர்த்தியதை தொடர்ந்து தமிழகம் மற்றும் அண்டை மாநிலங்களில் இருக்கக்கூடிய பால் நிறுவனங்களும் தங்களுடைய நிறுவனத்தின் பால் பாக்கெட்களின் விலையை உயர்த்தினர்.
விலையை உயர்த்தியதால் சரிவை சந்தித்த ஹட்சன் நிறுவனமானது தற்பொழுது ஏப்ரல் 21ஆம் தேதி 1 லிட்டர் பாலுக்கு 2 ரூபாய் மற்றும் 24 ஆம் தேதியான இன்று 1 லிட்டருக்கு 2 ரூபாய் என இதுவரை படிப்படியாக 4 ரூபாய் வரை தங்களுடைய நிறைகொழுப்பு பால் பாக்கெட்டுகளின் விலையை குறைத்து இருக்கிறது. இதனால் 40 ரூபாய்க்கு விற்கப்பட்டு வந்த 500 ml ஹட்சன் நிறை கொழுப்பு பால் பாக்கெட் 38 ரூபாய்க்கும் 1 l ஹட்சன் நிறை கொழுப்பு பால் பாக்கெட் 75 ரூபாயிலிருந்து 71 ரூபாயாக குறைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.