வெயில் காலத்தில் நமது உடலில் நீர்ச்சத்து குறைவது இயல்பான விஷயம்தான்.இதனால் உடலை நீரேற்றத்துடன் வைத்துக் கொள்ள வேண்டியாயது மிகவும் முக்கியம்.உடலில் நீர்ச்சத்து குறையாமல் இருக்க போதிய அளவு தண்ணீர் குடிக்க வேண்டும்.
உடலுக்கு தேவையான நீர் அருந்தினால் உடல் சோர்வாகாமல் இருக்கும்.ஒருவேளை நாம் தண்ணீர் அருந்துவதை தவிர்த்தால் பல்வேறு பாதிப்புகளை சந்திக்க நேரிடும்.உடலில் நீர்ச்சத்து குறைந்தால் சிறுநீரகம் சம்மந்தப்பட்ட பாதிப்புகள் குணமாகும்.
உடலுக்கு தேவையான நீர் அருந்தவில்லை என்றால் சிறுநீர் கழிக்கும் பொழுது வலி,எரிச்சல் போன்ற பாதிப்புகள் ஏற்படும்.உடலில் நீர்ச்சத்து குறைந்தால் அடர் மஞ்சள் நிறத்தில் சிறுநீர் வெளியேறும்.வயிறு வலி,வயிறு எரிச்சல்,அடிவயிற்று பகுதியில் கடுமையான வலியை சந்திக்க நேரிடும்.
உடலில் நீர்ச்சத்து குறைந்தால் மயக்கம்,உடல் சோர்வு போன்ற பாதிப்புகள் ஏற்படும்.நீர்ச்சத்து குறைபாட்டால் தோல் வறட்சி,தோல் சுருக்கம் போன்ற பாதிப்புகளை சந்திக்க நேரிடும்.எனவே கோடை காலத்தில் உடலை நீரேற்றத்துடன் வைத்துக் கொள்ள வேண்டியது முக்கியம்.6 முதல் 10 வயது வரை உள்ளவர்கள் தினமும் 1 1/2 லிட்டர் தண்ணீர் பருக வேண்டும்.
11 முதல் 19 வயது வரை உள்ளவர்கள் தினமும் இரண்டு லிட்டர் தண்ணீர் பருக வேண்டும்.20 முதல் 30 வயது வரை உள்ளவர்கள் தினமும் 2 1/2 லிட்டர் தண்ணீர் பருக வேண்டும்.30 வயதிற்கு மேல் இருப்பவர்கள் தினமும் 3 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும்.
இது தவிர உடலை நீரேற்றத்துடன் வைத்துக் கொள்ள இளநீர்,நுங்கு,தர்பூசணி போன்றவற்றை சாப்பிட வேண்டும்.இயற்கை குளிர்ச்சி நிறைந்த பொருட்களை உட்கொள்ள வேண்டும்.ஆரஞ்சு ஜூஸ்,எலுமிச்சை ஜூஸ் செய்து குடித்தால் உடல் புத்துணர்வுடன் இருக்கும்.நண்பகல் நேரத்தில் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும்.