உடல் நோய் பாதிப்புகளை குணப்படுத்தும் வீட்டு வைத்திய குறிப்புகள் இதோ.நிச்சயம் எதிர்பார்த்த பலன் கிடைக்கும்.
தொட்டால் சிணுங்கி
பசும் பால்
சிறிது தொட்டால் சிணுங்கி இலையை பறித்து தண்ணீர் விட்டு அரைத்து சிறு சிறு உருண்டைகளாக பிடித்து ஒரு கிளாஸ் பாலில் கலந்து குடித்தால் வெள்ளைப்படுதல் குணமாகும்.
தொட்டால் சிணுங்கி இலை
மிளகு
உப்பு
சிறிதளவு தொட்டால் சிணுங்கி இலையை பறித்து பாத்திரத்தில் போட்டுக் கொள்ள வேண்டும்.அடுத்து 10 கருப்பு மிளகை இடித்து அதில் போட்டுக் கொள்ள வேண்டும்.பிறகு சிறிதளவு உப்பு சேர்த்துக் கொள்ள வேண்டும்.
அதன் பிறகு ஒரு கப் தண்ணீர் ஊற்றி குறைவான தீயில் கொதிக்க வைக்க வேண்டும்.இந்த பானத்தை வடிகட்டி குடித்தால் சிறுநீரக கற்கள் கரைந்துவிடும்.
அரச மரப்பட்டை
தண்ணீர்
தேன்
முதலில் 50 கிராம் அரச மரப்பட்டையை வறுத்து பொடித்து வைத்துக் கொள்ள வேண்டும்.பிறகு அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கப் தண்ணீர் ஊற்றி சூடாக்க வேண்டும்.அதற்கு அடுத்து ஒரு தேக்கரண்டி அரச மரப்பட்டை பொடியை அதில் போட்டு கொதிக்க வைத்து தேன் கலந்து குடித்தால் சிறுநீரக கற்கள் கரையும்.
கருஞ்சீரகம்
உப்பு
தண்ணீர்
ஒரு தேக்கரண்டி கருஞ்சீரகத்தை பொடித்து வைத்துக் கொள்ள வேண்டும்.பிறகு அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.அதன் பிறகு அரைத்த கருஞ்சீரகப் பொடியை போட்டு கொதிக்க வைக்க வேண்டும்.இதை கிளாஸிற்கு வடிகட்டி சிறிது உப்பு கலந்து குடித்தால் நுரையீரல் ஆரோக்கியம் மேம்படும்.
வேப்பிலை
தண்ணீர்
பாத்திரத்தில் ஒரு கைப்பிடி வேப்பிலை போட்டு ஒரு கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்க வேண்டும்.பிறகு அடுப்பை அணைத்துவிட்டு வேப்பிலையை குளிக்கும் நீரில் கலந்து கொள்ள வேண்டும்.
இந்த நீரில் குளித்தால் தோல் சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் வராமல் இருக்கும்.வேப்பிலை பேஸ்டை சருமத்தில் பூசி குளித்தால் தோல் நோய்கள் குணமாகும்.