நோய்க்கு ஏற்ற கீரை வகைகள்!! எந்த நோய்க்கு எந்த கீரை மருந்தாக பயன்படுகிறது?

Photo of author

By Divya

நோய்க்கு ஏற்ற கீரை வகைகள்!! எந்த நோய்க்கு எந்த கீரை மருந்தாக பயன்படுகிறது?

Divya

நமது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த கீரை உணவுகளை அவசியம் உட்கொள்ள வேண்டும்.கீரையில் போலிக் ஆசிட்,இரும்பு,கால்சியம் போன்ற சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது.கீரையை சாப்பிட்டு வந்தால் இரத்த சோகை நோய் பாதிப்பு குணமாகும்.அதேபோல் உடலில் பல நோய்களுக்கு கீரை உணவு மருந்தாக பயன்படுகிறது.

நோய் தீர்க்கும் கீரைகள்:

1)வாதம்

தொய்யக் கீரையில் கடையல் செய்து சப்பிட்டு வந்தால் வாத நோய் பாதிப்பு குணமாகும்.

2)இரத்தக் கொதிப்பு

பொன்னாங்கண்ணி கீரையை உணவாக சாப்பிட்டு வந்தால் இரத்த கொதிப்பு பாதிப்பு குணமாகும்.

3)இரத்த சோகை

முருங்கை கீரையில் பொறியல்,சூப் செய்து சாப்பிட்டால் இரத்த சோகை பாதிப்பு குணமாகும்.

4)பித்தம்

சிறுகீரையை உணவாக சாப்பிட்டு வந்தால் பித்தம் குறையும்.மூக்கிரட்டை கீரையை உணவாக சாப்பிட்டு வந்தால் சிறுநீரக கற்கள் கரையும்.

5)மூட்டு வலி

உங்களுக்கு மூட்டு வலி,மூட்டு வீக்கம் குறைய முடக்கத்தான் கீரையை உணவாக சாப்பிடலாம்.முடக்கத்தான் கீரையை சாப்பிட்டால் எலும்புகள் வலிமை அதிகரிக்கும்.

6)ஞாபக சக்தி

மூளை ஆரோக்கியத்தை மேம்படுத்த,ஞாபக திறனை அதிகரிக்க வல்லாரை கீரையை உட்கொள்ளலாம்.

7)உடல் சூடு

உங்கள் உடல் சூடு தணிய வயிற்றுப் பிரச்சனைகள் குணமாக வெந்தயக் கீரையை உட்கொள்ளலாம்.

8)குடல் புண்

வயிற்றுப்புண்,அல்சர் புண்கள் குணமாக அகத்தி கீரையை உட்கொள்ளலாம்.இரைப்பை புண்களை குணப்படுத்த அகத்தி கீரையை சாப்பிடலாம்.

9)மலச்சிக்கல்

நார்ச்சத்து நிறைந்த பசலை கீரையை சாப்பிட்டால் மலச்சிக்கல்,செரிமானப் பிரச்சனை குணமாகும்.

10)இரைப்புண் வாய்ப்புண்

வாய்ப்புண்,குடல்புண் பிரச்சனை இருப்பவர்கள் மணத்தக்காளி கீரையை உட்கொள்ளலாம்.