இதய ஆரோக்கிய பாதுகாக்க சாப்பிட வேண்டிய மற்றும் தவிர்க்க வேண்டிய உணவுகள்!!

Photo of author

By Divya

இதய ஆரோக்கிய பாதுகாக்க சாப்பிட வேண்டிய மற்றும் தவிர்க்க வேண்டிய உணவுகள்!!

Divya

நம் இதயம் ஆரோக்கியத்தை மேம்படுத்த ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்ள வேண்டியது முக்கியம்.நமது இதயம் நல்ல ஆரோக்கியத்துடன் இருந்தால் உடலின் மற்ற உறுப்புகள் சுறுசுறுப்பாக செயல்படும்.

நம் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் உணவுகளும் இதய ஆரோக்கியத்தை மோசமாக்கும் உணவுகளும் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது.

இதயத்திற்கு நல்லது பண்ணும் 5 உணவுகள்:

1)மீன்

சால்மன்,நெத்திலி,ஜிலேபி,வஞ்சரம் போன்ற கடல் மீன்களை சாப்பிட்டு வந்தால் இதய ஆரோக்கியம் மேம்படும்.

2)பழங்கள்

ஆப்பிள்,ஆரஞ்சு,கொய்யா போன்ற பழங்களை உட்கொள்ளலாம்.நீர்ச்சத்து மற்றும் இரும்புச்சத்து நிறைந்த பழங்களை சாப்பிடலாம்.

3)கீரைகள் மற்றும் காய்கறிகள்

அனைத்து வகை கீரைகள் மற்றும் காய்கறிகளை கட்டாயம் சாப்பிட வேண்டும்.கீரை உணவுகள் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.அதேபோல் பச்சை காய்கறிகள் இதயத்தை வலுப்படுத்துகிறது.

4)உலர் விதைகள்

தினமும் ஒரு உலர் விதை வகையை ஊறவைத்து சாப்பிட்டு வந்தால் இதய ஆரோக்கியம் மேம்படும்.பாதாம் பருப்பு,வால்நட் போன்றவை இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.

5)டார்க் சிக்லெட்

நம் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த டார்க் சாக்லேட் சாப்பிடலாம்.இந்த சாக்லேட் இதயத்திற்கு செல்லும் இரத்த ஓட்டத்தை சீராக்க உதவுகிறது.

இதயத்திற்கு கெடுதல் தரும் 5 உணவுகள்:

1)பதப்படுத்தப்பட உணவுகள்

பெரும்பாலும் அசைவ உணவுகள் பதப்படுத்தி சாப்பிடப்படுகிறது.இப்படி சாப்பிட்டால் இதய ஆரோக்கியம் பாதிக்கப்பட்டுவிடும்.

2)பேக்கரி உணவுகள்

பப்ஸ்,தின்பண்டங்கள் இதய ஆரோக்கியத்தை முழுமையாக பாதிக்கச் செய்துவிடும்.இரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரித்து பாதிப்பை உண்டாக்கிவிடும்.

3)பொரித்த உணவுகள்

எண்ணையில் பொரித்த உணவுகளை சாப்பிட்டால் இரத்தக் குழாயில் கொழுப்பு தேங்கி மாரடைப்பு பாதிப்பை உணடாக்கிவிடும்.

4)கொழுப்பு அதிகம் உள்ள உணவுகள்

அதிக கொழுப்பு நிறைந்த உணவுகளை சாப்பிட்டால் உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் அளவு அதிகரித்து இதயத்தின் ஆரோக்கியம் மோசமாகிவிடும்.

5)இட்லி,தோசை

கார்போ ஹேட்ரேட் நிறைந்த இட்லி,தோசை உணவுகளை சாப்பிட்டு வந்தால் இதய ஆரோக்கியம் மோசமாகிவிடும்.அதேபோல் பாக்கெட் சிப்ஸ்,குளிர் பானங்கள்,ஜங்க் புட்ஸ்,வறுத்த உணவுகள் மற்றும் டின்னில் அடைத்து வைக்கப்பட்ட உணவுகளை சாப்பிட்டால் இதய ஆரோக்கியம் மோசமாகிவிடும்.