RRB தேர்வர்களின் கவனத்திற்கு!!11,000 காலி பணியிடங்களுக்கான தேர்வு குறித்த முக்கிய தகவல்!!

Photo of author

By Gayathri

RRB தேர்வர்களின் கவனத்திற்கு!!11,000 காலி பணியிடங்களுக்கான தேர்வு குறித்த முக்கிய தகவல்!!

Gayathri

Updated on:

attention-rrb-candidates-important-information-regarding-the-exam-for-11000-vacant-posts

இந்தியன் ரயில்வே துறையில் காலியாக இருக்கக்கூடிய 11,000 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை ஆர்ஆர்பி என் டி பி சி வெளியிட்டது. இதற்கு லட்சக்கணக்கானவர்கள் விண்ணப்பித்ததோடு தேர்வு தேதியை எதிர்நோக்கி தேர்வுகளுக்கு தயாராகி வருகின்றனர்.

காலி பணியிட விவரங்கள் :-

✓ கமர்சியல் டிக்கெட் மேற்பார்வையாளர் – 1736

✓ ஸ்டேஷன் மாஸ்டர் – 994

✓ சரக்கு ரயில் மேலாளர் – 3144

✓ ஜூனியர் அக்கவுண்ட் அசிஸ்டன்ட் டைப்பிஸ்ட் – 1507

✓ சீனியா கிளார்க் டைப்பிஸ்ட் – 732

✓ கமர்சியல் டிக்கெட் கிளர்க் – 2022

✓ கணக்கு எழுத்தாளர் டைப்பிஸ்ட் – 361

✓ ஜூனியர் கிளர்க் டைப்பிஸ்ட் – 990

✓ ரயில்வே கிளர்க் – 72

இந்த வேலை வாய்ப்புகளுக்கான கல்வி தகுதி பன்னிரண்டாம் வகுப்பு முதல் டிகிரி வரை என தெரிவிக்கப்பட்டுள்ளது. வேலைக்கு ஏற்றவாறு கல்வித்தகுதி மாறுபடும் என்றும் 18 வயது முதல் 36 வயதுக்கு உட்பட்டவராக இருத்தல் வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வேலை வாய்ப்பு களுக்கான சம்பளம் 19, 900 முதல் 35,400 வரை வேலைக்கு ஏற்றபடி சம்பளம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த காலி பணியிடங்களுக்கான தேர்வு எப்பொழுது என்று தேர்வர்கள் எதிர்பார்த்த இந்த நிலையில், இந்த தேர்வு வருகிற மே மாதம் அல்லது ஜூன் மாதத்தில் நடைபெறும் என அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது குறித்த அதிகாரப்பூர்வமான தேதி வெளியிடப்படவில்லை என்றாலும் மே அல்லது ஜூன் மாதங்களில் இது தேர்வுக்கான தேதிகள் குறிக்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.