ஐஸ்கட்டியை பின்பக்க தலையில் வைத்தால் எந்த நோய் குணமாகும் தெரியுமா?

Photo of author

By Divya

ஐஸ்கட்டியை பின்பக்க தலையில் வைத்தால் எந்த நோய் குணமாகும் தெரியுமா?

Divya

நாம் அடிக்கடி சந்திக்கும் பிரச்சனைகளில் ஒன்றுதான் தலைவலி.இந்த பாதிப்பு ஏற்பட்டால் வலி,பாரம் போன்ற பாதிப்புகளை சந்திக்க நேரிடும்.குறிப்பாக ஒற்றத் தலைவலி பாதிப்பு வந்தால் கடுமையான பாதிப்புகளை அனுபவிக்க நேரிடும்.தலைவலி பிரச்சனையை சரி செய்ய மருந்து மாத்திரை பயன்படுத்த வேண்டுமென்ற அவசியம் இல்லை.அதற்கு பதில் ஐஸ்கட்டிகளை தலைக்கு பின்னால் வைத்து அழுத்தம் கொடுத்தால் தலைவலி குணமாகிவிடும்.

பின்பக்க தலையில் ஐஸ்கட்டி வைத்து ஒத்தடம் கொடுப்பதால் கிடைக்கும் நன்மைகள்:

1)ஐஸ் பேக்கை பின் பக்க தலையில் வைத்து அழுத்தம் கொடுத்தால் இரத்த நாளங்கள் குளிரும்.இதன் காரணமாக தலைவலி பாதிப்பு குணமாகும்.

2)பின்பக்க தலையில் ஐஸ்கட்டிகளை வைப்பதால் வலி,காயங்கள் குறையும்.ஒற்றைத் தலைவலி பிரச்சனை இருப்பவர்கள் ஐஸ் பேக்கை தலைக்கு பின்னால் வைத்தால் வலி குறையும்.

3)தலையில் இரத்த நாளங்கள் வீங்கி இருந்தால் அதை ஐஸ் பேக் கொண்டு சரி செய்யலாம்.இதனால் வீக்கம் குறையும்.அதேபோல் நரம்புகளில் வீக்கம் இருந்தால் ஐஸ்பேக் வைத்து அழுத்தம் கொடுத்து சரி செய்யலாம்.

நமது கழுத்தின் பின்பக்கத்தில் கரோடிட் தமனிகள் இருக்கிறது.இந்த பகுதியில் ஐஸ்பேக் வைத்து ஒத்தடம் கொடுத்தால் வலி குறையும்.தலைவலியின் போது இரத்த நாளங்கள் குறுகி வலியை ஏற்படுத்துகிறது.இதனால் தலைவலி பாதிப்பை சந்திக்க நேரிடுகிறது.

ஐஸ்பேக் வைப்பது எப்படி?

குளிர்ந்த நீரில் ஒரு டவலை போட்டு ஊறவைத்து தலைக்கு பின்னால் அழுத்தம் கொடுக்கலாம்.அதேபோல் ஐஸ் துண்டுகளை ஒரு காட்டன் துணியில் போட்டு மூட்டை கட்டி தலைக்கு பின்னால் வைத்து அழுத்தம் கொடுத்தால் வலி குறையும்.

அதேபோல் கடைகளில் கிடைக்கும் ஐஸ்பேக் வாங்கி தலைக்கு பின்னால் வைத்து ஒத்தடம் கொடுத்தால் தலைவலி,ஒற்றைத் தலைவலி குணமாகும்.