முன்பெல்லாம் மின்விசிறி கற்றில் தூங்கினோம்.ஆனால் தற்பொழுது ஏர் கூலர்,ஏசி காற்றில் தூங்கி பழகிவிட்டோம்.அடிக்கும் வெயிலுக்கு ஏசி காற்று,ஏர் கூலர் போன்றவற்றை ஆன் செய்துவிட்டால் மட்டுமே இங்கு பலருக்கு தூக்கம் வருகிறது.இரவில் இந்த குளிர் காற்று இல்லாமல் தூங்குவது என்பது கடினமான ஒன்றாகும்.
ஏசி காற்று குளிர்ச்சி நிறைந்தவை என்றாலும் அவற்றை சுவாசிக்கும் பொழுது நமக்கு பல்வேறு உடல் நல பாதிப்புகள் ஏற்படும்.ஏசி காற்றில் தூங்கினால் என்ன பாதிப்புகள் ஏற்படும் என்பது குறித்த விழுப்புணர்வு அவசியம்.
ஏசி காற்றில் தூங்கினால் என்னென்ன பிரச்சனைகள் ஏற்படும்?
நாம் தினமும் ஏசி காற்றில் தூங்கினால் சுவாசம் சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் ஏற்பாடும்.ஏசி காற்று நுரையீரல் ஆரோக்கியத்தை பாதித்துவிடும்.
ஏசி காற்றை சுவாசித்தால் சளி,இருமல் போன்ற பாதிப்புகளை சந்திக்க நேரிடும்.ஏசி காற்றை சுவாசிக்கும் பொழுது நிம்மதியான தூக்கத்தை அனுபவிக்க முடியாது.ஏசி காற்றை சுவாசித்தால் தொண்டை எரிச்சல் பிரச்சனை ஏற்படும்.
ஏசி அறையில் உறங்குவதால் சுவாசப் பாதையில் கிருமி தொற்றுக்கள் அதிகம் பரவிவிடும்.சுவாசப் பாதையில் பாக்டீரியா கிருமி தொற்றுகள் பரவிவிடும்.கோடை காலத்தில் ஏசி பயன்பாடு அதிகமாக இருக்கிறது.
ஏசி காற்றில் தூங்கினால் கண் வறட்சி,தோல் வறட்சி போன்ற பாதிப்புகளை சந்திக்க நேரிடும்.ஏசி காற்று தோலில் படுவதால் தசைகள் இறுக்கம் ஏற்பட்டு வலி உண்டாகும்.
தொடர்ந்து ஏசி காற்றை சுவாசித்து கொண்டு தூங்கினால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து உடல் பலவீனமாகிவிடும்.ஏசி காற்று சிலருக்கு அலர்ஜி பாதிப்பை உண்டாக்கும்.சைனஸ்,சருமப் பிரச்சனை இருப்பவர்கள் ஏசி காற்றில் தூங்குவதை தவிர்க்க வேண்டும்.
கண் எரிச்சல்,தும்மல்,மூக்கடைப்பு,மூக்கில் நீர் வடிதல் பிரச்சனை இருப்பவர்கள் ஏசி காற்றில் உறங்குவதை தவிர்க்க வேண்டும்.