உலர் விதைகளை எடுத்துக் கொண்டால் வால்நட்டில் தான் அதிக ஊட்டச்சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது.இந்த உலர்விதை மற்றவற்றைவிட தனித்துவம் நிறைந்தவையாக இருக்கிறது.வால்நட்டில் பைபர்,புரதம்,மெக்னீசியம்,கால்சியம்,மாங்கனீசு போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது.
அதேபோல் செலினியம்,துத்தநாகம்,வைட்டமின் ஈ,வைட்டமின் பி போன்ற ஊட்டச்சத்துக்களும் இதில் நிறைந்திருக்கிறது.வால்நட் சாப்பிட்டால் உடலில் நோய் எதிர்ப்பு பண்புகள் அதிகரிக்கும்.வால்நட்டை ஊறவைத்து சாப்பிட்டு வந்தால் மூளை செயல்திறன் அதிகரிக்கும்.
மூளை சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் அனைத்தும் குணமாக வால்நட்டை சாப்பிடலாம்.இதில் இருக்கின்ற ஒமேகா 3 கொழுப்பு அமிலம் சருமப் பிரச்சனைகளை சரி செய்ய உதவுகிறது.மூளையின் செயல்பாடு அதிகரிக்க வால்நட் சாப்பிடலாம்.இந்த வால்நட்டில் ஆன்டி ஆக்ஸிடன்ட்ஸ் அதிகளவு நிறைந்து காணப்படுகிறது.இதை சாப்பிட்டால் உடலில் நோய் எதிர்ப்பு திறன் அதிகரிக்கும்.
குடல் ஆரோக்கியம் மேம்பட வால்நட்டை வறுத்து தேனில் ஊறவைத்து சாப்பிடலாம்.வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க வால்நட்டை சாப்பிடலாம்.இதய ஆரோக்கியம் மேம்பட வால்நட் உட்கொள்ளலாம்.இரத்த ஓட்டத்தை அதிகரிக்க வால்நட் உட்கொள்ளலாம்.உடல் பருமனாக இருப்பவர்கள் வால்நட்டை ஊறவைத்து சாப்பிட்டு வந்தால் கெட்ட கொழுப்பு அதிகரிக்காமல் இருக்கும்.ஞாபகத் திறன் மேம்பட வால்நட்டை ஊறவைத்து சாப்பிடலாம்.
மாம்பழம்,வாழைப்பழம்,வால்நட் ஆகியவற்றை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கிண்ணத்தில் போட்டு தேன் கலந்து சாலட்டாக சாப்பிட்டு வந்தால் உடல் ஆரோக்கியம் மேம்படும்.வால்நட்டை பொடித்து பாலில் கலந்து குடித்தால் மூளை வளர்ச்சி மேம்படும்.
சரும ஆரோக்கியம் மேம்பட வால்நட் உட்கொள்ளலாம்.தினமும் ஐந்து வால்நட் சாப்பிட்டு வந்தால் உடல் ஆரோக்கியம் மேம்படும்.இரத்த நாளங்கள் செயல்பாடு அதிகரிக்க வால்நட் சாப்பிடலாம்.உடலில் நல்ல பாக்டீரியாக்களின் வளர்ச்சியை அதிகப்படுத்த வால்நட் சாப்பிடலாம்.கண் ஆரோக்கியத்தை மேம்படுத்த வால்நட் உட்கொள்ளலாம்.