சிறியவர்கள் மட்டுமின்றி பெரியவர்களுக்கும் இனிப்பு ஒரு விருப்ப அறுசுவையாக இருக்கிறது.தினமும் ஏதேனும் ஒரு இனிப்பு உணவை ருசிப்பதை அனைவரும் வழக்கமாக வைத்திருக்கின்றோம்.இதில் டார்க் சாக்லேட்டில் மாங்கனீசு,மெக்னீசியம்,காப்பர்,நார்ச்சத்து போன்றவை நிறைந்து காணப்படுகிறது.
டார்க் சாக்லேட் மற்ற சாக்லேட் போன்று அல்ல.இதை சாப்பிட்டால் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கும்.இனிப்பு சாப்பிட்டால் இரத்த சர்க்கரை அளவு உயரும் என்பது அனைவரும் அறிந்த உண்மை.ஆனால் இந்த டார்க் சாக்லேட் சாப்பிட்டால் எந்த பாதிப்பும் ஏற்படாது.
டார்க் சாக்லேட் சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்:
1)தினமும் ஒரு டார்க் சாக்லேட் சாப்பிட்டால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.இதில் இருக்கின்ற ஆன்டி ஆக்ஸிடன்ட்ஸ் இம்யூனிட்டி பவரை அதிகரிக்க உதவுகிறது.
2)தினமும் டார்க் சாக்லேட் சாப்பிட்டால் சரும ஆரோக்கியம் மேம்படும்.டார்க் சாக்லேட் சாப்பிட்டால் முகத்தில் கரும்புள்ளிகள் வராமல் இருக்கும்.
3)உடலில் ஆற்றலை அதிகரிக்க டார்க் சாக்லேட் சாப்பிடலாம்.தினசரி டார்க் சாக்லேட் சாப்பிட்டால் மன அழுத்தம் குறையும்.
4)இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த டார்க் சாக்லேட் சாப்பிடலாம். உடல் எடையை குறைக்க டார்க் சாக்லேட் சாப்பிடலாம்.உடலில் படியும் கெட்ட கொழுப்பு கரைய இந்த டார்க் சாக்லேட் சாப்பிடலாம்.
5)மாதவிடாய் பிரச்சனை இருக்கும் பெண்கள் டார்க் சாக்லேட் சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும்.சருமம் சம்மந்தபட்ட பிரச்சனைகள் அகல டார்க் சாக்லேட் சாப்பிடலாம்.இரத்தம் சம்மந்தபட்ட பிரச்சனைகள் வராமல் இருக்க டார்க் சாக்லேட் சாப்பிடலாம்.
6)டார்க் சாக்லேட்டில் இருக்கின்ற நார்ச்சத்து மலச்சிக்கல் பிரச்சனையை சரி செய்கிறது.செரிமானப் பிரச்சனை வராமல் தடுக்கிறது.