உடலில் இம்யூனிட்டி பவர் அதிகரிக்க.. இந்த கீரையில் சூப் செய்து குடிங்க!!

Photo of author

By Divya

உடலில் இம்யூனிட்டி பவர் அதிகரிக்க.. இந்த கீரையில் சூப் செய்து குடிங்க!!

Divya

முருங்கை கீரையில் இரும்புச்சத்து அதிகமாக நிறைந்திருக்கிறது.இந்த கீரையை கொண்டு சூப் செய்து குடித்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.முருங்கை கீரையை சாப்பிட்டு வந்தால் இரத்த சோகை பாதிப்பு குணமாகும்.உடல் சூடு தணிய கண் ஆரோக்கியம் மேம்பட முருங்கை கீரையை உணவாக உட்கொள்ளலாம்.முருங்கை கீரையில் கால்சியம்,பாஸ்பரஸ்,வைட்டமின் ஏ,வைட்டமின் சி உள்ளிட்ட சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது.

முருங்கை கீரை சூப் தயாரிக்கும் முறை:

தேவையான பொருட்கள்:-

1)முருங்கை கீரை – ஒரு கப்
2)வெள்ளைப் பூண்டு பற்கள் – இரண்டு
3)மஞ்சள் தூள் – சிட்டிகை அளவு
4)மிளகு – நான்கு

செய்முறை விளக்கம்:-

முதலில் ஒரு கப் முருங்கை கீரையை தண்ணீரில் போட்டு அலசி சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.பின்னர் இதை பாத்திரத்தில் போட்டு தண்ணீர் ஊற்றிக் குறைவான தீயில் கொதிக்க வைக்க வேண்டும்.

அடுத்து இரண்டு வெள்ளைப் பூண்டு பற்களை தோல் நீக்கிவிட்டு அதில் போட்டுக் கொள்ள வேண்டும்.அதன் பிறகு நான்கு மிளகை உரலில் போட்டு இடித்துக் கொள்ள வேண்டும்.

அதன் பிறகு சிட்டிகை அளவு மஞ்சள் தூளை அதில் போட்டு குறைவான தீயில் கொதிக்க வைக்க வேண்டும்.இந்த பானம் நன்றாக கொதித்து வந்த பின்னர் இதை கிளாஸிற்கு ஊற்றிக் கொள்ள வேண்டும்.

இந்த முருங்கை கீரை பானத்தை குடித்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.இரத்தத்தில் இருக்கின்ற சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும்.

தேவையான பொருட்கள்:-

1)முருங்கை கீரை – ஒரு கப்
2)தண்ணீர் – ஒரு கப்

செய்முறை விளக்கம்:-

முதலில் ஒரு கப் முருங்கை கீரையை தண்ணீரில் போட்டு அலசி சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.அடுத்து அடுப்பில் பாத்திரம் வைத்து இந்த முருங்கை கீரையை போட்டுக் கொள்ள வேண்டும்.

அதன் பிரகள ஒரு கப் தண்ணீர் ஊற்றி குறைவான தீயில் கொதிக்க வைக்க வேண்டும்.இந்த பானத்தை வடிகட்டி குடித்தால் சிவப்பணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க முருங்கை கீரை சூப் செய்து குடிக்கலாம்.