ஒருமுறை பயன்படுத்திய எண்ணையில் மீண்டும் சமைக்கலாமா? டாக்டர் என்ன சொல்றாங்கன்னு பாருங்க!!

Photo of author

By Divya

ஒருமுறை பயன்படுத்திய எண்ணையில் மீண்டும் சமைக்கலாமா? டாக்டர் என்ன சொல்றாங்கன்னு பாருங்க!!

Divya

நாம் தினசரி சாப்பிடும் பெரும்பாலான உணவுகளில் எண்ணெய் பயன்படுத்தப்படுகிறது.தற்பொழுது எண்ணெய் உணவுகளின் ஆதிக்கம் அதிகமாக இருக்கிறது.உணவுகளை வறுக்க,பொரிக்க என்று அனைத்திலும் எண்ணெய் சேர்க்கப்படுகிறது.

இதில் பூரி,பஜ்ஜி,போண்டா போன்ற எண்ணையில் பொரிதெடுக்க கூடிய உணவுகளை சமைத்த பிறகு மீதமாகும் எண்ணையை திரும்ப பயன்படுத்துவதை பலரும் வழக்கத்தில் ஒன்றாக வைத்திருக்கின்றனர்.ஒருமுறை சமைத்த எண்ணையை மீண்டும் மீண்டும் பயன்படுத்தலாமா என்பது ஆரோக்கியமான செயலா என்பதை சிந்திக்க வேண்டும்.

ஒருமுறை சமைத்த எண்ணையை மீண்டும் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள்:

சமைத்த எண்ணையை மீண்டும் சூடுபடுத்தும் போது அதில் கொலஸ்ட்ரால் அளவு அதிகரிக்கும்.ஒருமுறை பயன்படுத்திய எண்ணையில் மீண்டும் சமைத்து உட்கொண்டால் வயிறு ஆரோக்கியம் பாதிக்கப்பட்டுவிடும்.

எண்ணையை மீண்டும் சூடுபடுத்தினால் அதில் இருக்கின்ற கொழுப்பு டிரான்ஸ் கொழுப்பாக மாறிவிடும்.இந்த கொழுப்பு நிறைந்த எண்ணைய் உணவை சாப்பிட்டால் இதய ஆரோக்கியம் மோசமாகிவிடும்.

ஒருமுறை பயன்படுத்திய எண்ணெயை மீண்டும் மீண்டும் சூடுப்படுத்தி சமைக்கும் பொழுது உடலுக்கு தீங்காக மாறிவிடும்.அசைவ உணவுகள் பொரித்த எண்ணையை மீண்டும் பயன்படுத்தினால் அது குடல் ஆரோக்கியத்தை மோசமாக்கிவிடும்.

ஒருமுறை சமைத்த எண்ணையை மீண்டும் பயன்படுத்தினால் உயர் இரத்த அழுத்த பாதிப்பு ஏற்படும்.சமைத்த எண்ணையை மீண்டும் மீண்டும் பயன்படுத்தினால் நீரிழிவு நோய் அபாயம் உருவாகும்.உணவு சமைக்க பயன்படுத்திய எண்ணையை மீண்டும் யூஸ் செய்தால் இரத்தம் சம்மந்தபட்ட பாதிப்புகள் ஏற்படும்.

கெட்ட கொலஸ்ட்ரால் அளவு அதிகரித்தல்,உடல் பருமன்,மாரடைப்பு போன்ற பாதிப்புகள் ஏற்பட இதுவும் ஒரு காரணமாகும்.ஒருமுறை சமைத்த எண்ணையை மீண்டும் பயன்படுத்துவது நல்லது அல்ல என்றாலும் அதை ஒருமுறை மட்டும் பயன்படுத்தலாம் என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.