நாம் பயன்படுத்தும் உணவுப் பொருட்களில் ஒன்று வெந்தயம்.இது பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை கொண்டிருக்கிறது.வெந்தயத்தை ஊறவைத்தோ அல்லது பொடித்தோ சாப்பிட்டு வந்தால் உடலுக்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கும்.
வெந்தயத்தின் சத்துக்கள்:
**கால்சியம் **பொட்டாசியம் **புரோட்டின் **வைட்டமின் சி **நியாசின் **இரும்பு **நார்ச்சத்து
தினமும் வெந்தயம் சாப்பிடுவதால் நமக்கு கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்:
1)வெந்தயத்தை ஊறவைத்து சாப்பிட்டு வந்தால் செரிமான ஆரோக்கியம் மேம்படும்.வயிறு சம்மந்தபட்ட பிரச்சனை இருந்தால் ஊறவைத்த வெந்தயத்தை சாப்பிடலாம்.அடிவயிற்று வலி இருப்பவர்கள் ஒரு தேக்கரண்டி வெந்தயத்தை மென்று சாப்பிடலாம்.
2)உடலில் சூடு தணிய ஊறவைத்த வெந்தயத்தை சாப்பிடலாம்.பொருமல் குணமாக ஊறவைக்கப்பட்ட வெந்தயம் உட்கொள்ளலாம்.
3)உடலில் இருக்கின்ற கெட்ட கொலஸ்ட்ரால் கரைய ஊறவைத்த வெந்தயத்தை சாப்பிடலாம்.வெந்தயம் சாப்பிட்டால் இரத்த சர்க்கரை அளவு கட்டுப்படும்.
4)உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் தினமும் வெந்தயத்தை சாப்பிட வேண்டும்.பசியை கட்டுப்படுத்த வெந்தயத்தை உட்கொள்ளலாம்.
5)இதய ஆரோக்கியம் மேம்பட இரத்த கொதிப்பு குணமாக வெந்தயத்தை ஊறவைத்து சாப்பிடலாம்.
6)தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்க ஊறவைத்த வெந்தயத்தை சாப்பிடலாம்.தலைமுடி வளர்ச்சிக்கு வெந்தயத்தை ஊறவைத்து சாப்பிடலாம்.
7)தோல் தொடர்பான பாதிப்புகள் வராமல் இருக்க வெந்தயத்தை ஊறவைத்து சாப்பிடலாம்.உடலில் படியும் தேவையற்ற நச்சு கழிவுகளை அகற்ற வெந்தயத்தை சாப்பிடலாம்.
8)வெந்தயப் பொடியை ஒரு கிளாஸ் பசு மோரில் கலந்து குடித்தால் குடல் புண்கள் குணமாகும்.