அடிக்கடி சுண்டைக்காய் உணவுகளை சாப்பிட்டு வந்தால் உடல் ஆரோக்கியம் மேம்படும்.சுண்டைக்காய் செரிமானப் பிரச்சனையை சரி செய்ய உதவுகிறது.சுண்டைக்காய் இரத்த சோகை பாதிப்பை குணப்படுத்த உதவுகிறது.
இதய ஆரோக்கியம் மேம்பட சுண்டைக்காய் சாப்பிடலாம்.சுண்டைக்காய் சாறு குடித்தால் குடல் ஆரோக்கியம் மேம்படும்.உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க சுண்டைக்காய் சாப்பிடலாம்.இதில் இருக்கின்ற பொட்டாசியம் சத்து இதயத்தை காக்கிறது.
சிறுநீரகம் சம்மந்தபட்ட பிரச்சனைகள் குணமாக சுண்டைக்காய் சாறு பருகலாம்குடல் புண்கள் குணமாக தினமும் ஐந்து சுண்டைக்காயை இடித்து தண்ணீரில் கலந்து குடிக்கலாம்.நரம்புகளின் வலிமையை அதிகப்படுத்த சுண்டைக்காய் ஜூஸ் குடிக்கலாம்.
வயிற்றில் உள்ள புழுக்களை வெளியேற்ற சுண்டைக்காய் ஜூஸ் குடிக்கலாம்.வயிற்றுப்போக்கு நிற்க சுண்டைக்காய் சாறு பருகலாம்.இரத்தத்தில் காணப்படும் நச்சுக் கழிவுகளை வெளியேற்ற இதை சாப்பிடலாம்.இதில் இருக்கின்ற கால்சியம் சத்து உடல் எலும்புகளை பலப்படுத்துகிறது.
தேவைப்படும் பொருட்கள்:-
1)சுண்டைக்காய்
2)மோர்
செய்முறை விளக்கம்:-
முதலில் பத்து சுண்டைக்காய் எடுத்துக் கொள்ள வேண்டும்.பிறகு அதை தண்ணீரில் போட்டு அலசி சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.
பிறகு இதை உரலில் போட்டு இடித்து வைத்துக் கொள்ள வேண்டும்.இந்த சுண்டையக்காய் விழுதை ஒரு கிளாஸ் மோரில் கலந்து குடித்து வந்தால் சிறுநீரக கல் கரையும்.
அதேபோல் மூக்கிரட்டை கீரையை கொஞ்சம் எடுத்து அரைத்து மோரில் கலந்து குடித்தால் சிறுநீரக ஆரோக்கியம் மேம்படும்.வாழைத்தண்டை அரைத்து சாறு எடுத்து பருகி வந்தால் சிறுநீரகத்தில் கல் படியாமல் இருக்கும்.
சுண்டைக்காயை வற்றல் பதத்திற்கு காய வைத்து மோரில் ஊறவைத்து சாப்பிட்டு வந்தால் உடல் ஆரோக்கியம் மேம்படும்.