எருக்கன் பூ இருக்கா? அப்போ மூட்டு வலி மருந்தை நிமிடத்தில் ரெடி பண்ணலாமே!!

Photo of author

By Divya

எருக்கன் பூ இருக்கா? அப்போ மூட்டு வலி மருந்தை நிமிடத்தில் ரெடி பண்ணலாமே!!

Divya

உங்கள் மூட்டு பகுதியில் கடுமையான வலி இருந்தால் அதை குணப்படுத்திக் கொள்ள எருக்கன் பூ மற்றும் இலையை மருந்தாக பயன்படுத்தலாம்.நம் முன்னோர்கள் காலத்தில் இருந்து இது மூட்டு வலியை குணமாக்கும் மருந்தாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.

தேவைப்படும் பொருட்கள்:-

1)எருக்கன் பூ – ஒரு தேக்கரண்டி
2)வேப்ப எண்ணெய் – 20 மில்லி

செய்முறை விளக்கம்:-

முதலில் நீனால் நான்கு அல்லது ஐந்து எருக்கன் பூவை சேகரித்து வைத்துக் கொள்ள வேண்டும்.பிறகு ஒரு தாளிப்பு கரண்டியில் இந்த வேப்ப எண்ணெய் 20 மில்லி அளவு ஊற்றிக் கொள்ள வேண்டும்.

அதன் பிறகு எருக்கன் பூவை அதில் போட்டு குறைவான தீயில் வதக்க வேண்டும்.பிறகு இவை இளஞ்சூடாக வந்ததும் எருக்கன் பூவை மூட்டு பகுதியில் வைத்து கட்ட வேண்டும்.இப்படி தினமும் இரவு நேரத்தில் செய்து வந்தால் மூட்டு வலி பாதிப்பு குணமாகும்.

தேவையான பொருட்கள்:-

1)எருக்கன் இலை – ஒன்று
2)விளக்கெண்ணெய் – ஒரு தேக்கரண்டி

செய்முறை விளக்கம்:-

முதலில் ஒரு எருக்கன் இலை எடுத்துக் கொள்ள வேண்டும்.பிறகு அதன் இரு புறத்திலும் விளக்கெண்ணெய் தடவிக் கொள்ள வேண்டும்.

அடுத்து அடுப்பில் தோசைக்கல் வைத்து வாட்டி எடுக்க வேண்டும்.அதன் பிறகு இந்த இலையை மூட்டு பகுதியில் வைத்து கட்ட வேண்டும்.இப்படி செய்தால் மூட்டு வலி பாதிப்பு குணமாகும்.

தேவையான பொருட்கள்:-

1)எருக்கன் இலை – ஒன்று
2)மஞ்சள் தூள் – சிறிதளவு
3)வேப்ப எண்ணெய் – ஒரு தேக்கரண்டி

செய்முறை விளக்கம்:-

முதலில் ஒரு எருக்கன் இலையை எடுத்து உரலில் போட்டு அரைக்க வேண்டும்.பிறகு இதை கிண்ணத்தில் போட்டுக் கொள்ள வேண்டும்.

அடுத்து அதில் அரை தேக்கரண்டி அளவு மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும்.பின்னர் அதில் ஒரு தேக்கரண்டி வேப்ப எண்ணெய் ஊற்றி கலக்க வேண்டும்.இதை மூட்டு பகுதியில் வைத்து தேய்த்து கட்டினால் வலி குறையும்.