நாம் சுவாசம் சம்மந்தப்பட்ட பிரச்சனைகளை அனுபவிக்காமல் இருந்தால் நமது ஆரோக்கியம் மேம்படும்.இன்று பெரும்பாலும் சுவாசம் சம்மந்தப்பட்ட பிரச்சனையையே பலரும் சந்திக்கின்றனர்.காற்றுமாசுபடு,மோசமான வாழ்க்கைமுறை போன்ற காரணங்களால் சுவாசப் பாதையில் தொற்றுகள் உருவாகிவிடுகிறது.இதனால் சைனஸ்,அலர்ஜி,ஆஸ்துமா போன்ற பாதிப்புகளை சந்திக்க நேரிடுகிறது.
இது தவிர மூச்சு சம்மந்தப்பட்ட பிரச்சனை இருந்தால் இதய ஆரோக்கியம் பாதிக்கப்பட்டுவிடும்.எனவே தினமும் ஒரு நிமிடம் ஒதுக்கி மூச்சி பயிற்சி செய்து வந்தால் நுரையீரல் ஆரோக்கியம் மேம்படும்.
மூச்சுப் பயிற்சி செய்வதால் கிடைக்கும் ஆரோக்கிய பலன்கள்:
1)தினமும் ஒரு நிமிடம் மூச்சை நன்றாக உள்ளிழுத்துவிட்டால் சுவாசப் பிரச்சனைகள் அகலும்.
2)சுவாசப் பயிற்சி மேற்கொண்டால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.தினமும் மூச்சுப் பயிற்சி செய்தால் உடல் கழிவுகள் எளிதில் வெளியேறும்.
3)நுரையீரல் ஆரோக்கியம் மேம்பட தினமும் மூச்சுப் பயிற்சி செய்யலாம்.தினமும் ஒரு நிமிடம் ஒதுக்கி மூச்சு பயிற்சியில் ஈடுபட்டால் நமது உடல் மற்றும் மன ஆரோக்கியம் மேம்படும்.இதனால் ஆயுட் காலம் நீடிக்கும்.
4)அமைதி நிறைந்த இடத்தில் மூச்சுப் பயிற்சி மேற்கொண்டால் நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்கும்.இதயம் சம்மந்தப்பட்ட பிரச்சனைகளை தவிர்க்க தினமும் ஒரு நிமிடம் மூச்சுப் பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.
5)மூச்சுப் பயிற்சி செய்யும் பொழுது ஒரே நேரத்தில் மூச்சை உள்ளிழுக்க வேண்டும்.அதேபோல் வெளிவிட வேண்டும்.இப்படி மூச்சுப் பயிற்சி செய்தால் உடல் ஆரோக்கியத்துடன் வாழலாம்.
6)காலையில் தினமும் 10 நிமிடம் இந்த மூச்சுப் பயிற்சி செய்தால் சுவாசம் சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் குணமாகும்.மூச்சுப் பயிற்சி செய்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.