இந்த 3 விஷயத்தை பாலோ செய்தால்.. கட்டிலோடு கிடக்கும் நீங்கள் 80 வயதிலும் எழுந்து ஓடுவீங்க!!

Photo of author

By Divya

இந்த 3 விஷயத்தை பாலோ செய்தால்.. கட்டிலோடு கிடக்கும் நீங்கள் 80 வயதிலும் எழுந்து ஓடுவீங்க!!

Divya

நாம் வாழ்நாள் முழுவதும் ஆரோக்கியமாக வாழ வேண்டுமென்றால் ஆரோக்கிய பழக்கங்களை நாம் பின்பற்ற வேண்டும்.இன்று பெரும்பாலானோர் சோம்பல் வாழ்க்கை முறையை அனுபவித்து வருகின்றனர்.ஒரே இடத்தில் நீண்ட நேரம் அமர்ந்து வேலைபார்த்தால்,நீண்ட நேரம் நின்று கொண்டு வேலைபார்த்தால் போன்ற காரணங்களால் விரைவில் மூட்டு சம்மந்தப்பட்ட பிரச்சனைகளை அனுபவிக்கின்றனர்.

முன்பெல்லாம் 50 வயதை கடந்தவர்களுக்கு மூட்டு வலி பாதிப்பு வந்தது.ஆனால் தற்பொழுது பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு கூட மூட்டு வலி ஏற்படுகிறது.ஆரோக்கியம் இல்லாத உணவுப் பழக்கம்,கால்சியம் பற்றாக்குறை,வைட்டமின் டி பற்றாக்குறை போன்ற காரணங்களால் மூட்டு பகுதியில் வலி ஏற்படுகிறது.நாம் ஒரே இடத்தில் நீண்ட நேரம் அமர்ந்திருந்தால் எலும்புகளின் அடர்த்தி குறைந்துவிடும்.எலும்புகளின் வலிமை குறைந்து மிருதுவாக மாறிவிடும்.இதனால் நடக்க,ஓட முடியாத நிலை ஏற்படும்.

நாம் இளமை பருவத்தில் சுறுசுறுப்பாக இருந்தால் மட்டுமே முதுமை காலத்தில் படுத்த கிடக்கும் நிலையை சந்திக்க மாட்டோம்.ஆனால் நாம் இளமையில் சோம்பல் வாழ்க்கை முறையை கடைபிடிப்பதால் முதுமை காலத்தில் நோய் வாய்ப்படும் நிலைக்கு தள்ளப்படுகின்றோம்.

இளம் வயதில் எலும்பு வலிமையை அதிகரிக்க வழிகள்:-

1)தினமும் காலை மற்றும் மாலை நேரத்தில் 30 நிமிடங்கள் நடைபயிற்சி மேற்கொள்ள வேண்டும்.

2)கால்சியம் சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும்.பால்,பால் பொருட்களில் கால்சியம் கொட்டி கிடக்கிறது.

3)தினமும் 10 நிமிடம் சூரிய வெளிச்சத்தில் நடைபயிற்சி செய்ய வேண்டும்.காலை மற்றும் மாலை நேரத்தில் சன் பாத் எடுக்க வேண்டும்.

4)புரதம் நிறைந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும்.எலும்புகளுக்கு வலிமை தரும் உடற்பயிற்சிகளை செய்ய வேண்டும்.15 நிமிடங்களுக்கு ஓடு பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.இப்படி செய்தால் எலும்புகளின் வலிமை அதிகரிக்கும்.