இது தெரியுமா? மிக்சி ஜாரை இப்படி யூஸ் பண்ணுனா.. உங்களுக்கு கிட்னி ஸ்டோன் வருமாம்!!

Photo of author

By Divya

இது தெரியுமா? மிக்சி ஜாரை இப்படி யூஸ் பண்ணுனா.. உங்களுக்கு கிட்னி ஸ்டோன் வருமாம்!!

Divya

நாம் செய்யும் சில கவனக் குறைவான விஷயத்தால் நமக்கு நோய் பாதிப்பு வருகிறது.இன்று பெரும்பாலானோர் சுத்தத்தை கடைபிடிப்பதில்லை.இன்றைய காலகட்டத்தில் நோய் பாதிப்புகள் உருவாக முதன்மை காரணம் சுத்தமின்மைதான்.

நாம் அசுத்தமாக இருந்தால் உடலில் பாக்டீரியா,கிருமிகள் நுழைந்து நோய் பாதிப்பை உருவாக்கிவிடும்.நாம் நோய்வாய்ப்பட சமையலறையும் ஒரு காரணம் என்றால் நம்ப முடிகிறதா.ஆம் நாம் சமையலறை மற்றும் சமைக்கும் பாத்திரத்தை சுத்தமாக வைத்துக் கொள்ளவில்லை என்றால் நமக்கு நோய் பாதிப்பு ஏற்பட்டுவிடும்.

அழுக்கு படிந்த சமையல் பாத்திரத்தை பயன்படுத்தினால் அதில் இருக்கின்ற கிருமிகள் நமது சிறுநீரக ஆரோக்கியத்தை பாதிக்கச் செய்துவிடும் என்ற தகவல் ஆராய்ச்சியின் முடிவில் தெரிய வந்திருக்கிறது.கிருமித் தொற்று உள்ள பாத்திரங்களை தொடர்ந்து பயன்படுத்தி வந்தால்
சிறுநீரக கல்,சிறுநீரக செயலிழப்பு போன்ற பாதிப்புகளை சந்திக்க நேரிடும்.மிக்சர் ஜார் அனைவரும் பயன்படுத்தும் பொருளாகும்.இந்த மிக்சர் ஜாரில் சட்னி,மசாலா போன்றவற்றை அரைக்கின்றோம்.

இதனால் ஜார் முடியின் பெல்ட்டில் கழிவுகள் அப்படியே படிந்துவிடுகிறது.இதை
நாம் சுத்தம் செய்யாமல் பயன்படுத்தினால் அதில் இருக்கின்ற அழுக்கு உடலில் நேரடியாக நுழைந்து பலப் பிரச்சனைகளை ஏற்படுத்தும்.அதேபோல் குக்கர் மூடி பெல்ட்டையும் நாம் வாரம் ஒரு முறையாவது சுத்தம் செய்ய வேண்டும்.சமையல் பாத்திரங்களை துலக்க பயன்படுத்தும் ஸ்பான்ச்,நார் போன்றவற்றை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும்.

பாத்திரத்தில் வெது வெதுப்பான தண்ணீர் ஊற்றி மிக்சர் ஜார் மற்றும் அதன் மூடியை போட்டு ஊறாவிட்டால் அழுக்குகள் வந்துவிடும்.அதேபோல் குக்கர் மற்றும் மிக்சர் ஜார் மூடியின் பெல்ட்டை கழற்றிவிட்டு வெது வெதுப்பான தண்ணீரில் போட்டு சுத்தம் செய்ய வேண்டும்.சமையல் பாத்திரங்களை சுத்தம் செய்ய பயன்படுத்தும் ஸ்பான்ச்சை சுடுநீரில் போட்டு ஊறவைத்த பிறகு யூஸ் பண்ணலாம்.இப்படி செய்தால் கிருமிகள் எளிதில் நீங்கிவிடும்.