நமது தலைக்கு பின் பக்கத்தில் வலி இருந்தால் அதற்கு பல காரணங்கள் சொல்லப்படுகிறது.தலைவலி,ஒருபக்க தலைவலி,டென்ஷன்,தலையில் வீக்கம்,அடிபடுதல்,நீரிழப்பு போன்ற காரணங்களால் பின்பக்க மண்டையில் தலைவலி ஏற்படுகிறது.
இது தவிர தூக்கமின்மை,கண் சம்மந்தப்பட்ட பிரச்சனை,சைனஸ் தொற்று,காது பகுதியில் வலி மற்றும் கழுத்து பகுதியில் வலி இருந்தால் தலைவலி பாதிப்பு ஏற்படும்.இந்த பின்பக்க தலைவலி கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும்.நின்றால்,தலையை அசைத்தால் கடுமையான தலைவலி பாதிப்பு ஏற்படும்.இந்த தலைவலி பாதிப்பு அனைவருக்கும் பொதுவான ஒரு விஷயமாக இருக்கிறது.
அதேபோல் கழுத்துப் பகுதியில் உள்ள தசைகளில் பிடிப்பு,வலி ஏற்பட்டால் பின்பக்கத்தில் சுளீரென்று வலி ஏற்படும்.அதிக நேரம் குனிந்தபடி மொபைல் பயன்படுத்துதல்,குனிந்த நிலையில் வேலைபார்த்தல் போன்ற காரணங்களால் பின்பக்க தலையில் சுள்ளென்று வலி ஏற்படுகிறது.
இந்த பாதிப்பில் இருந்து மீள கீழே கொடுக்கப்பட்டுள்ள டிப்ஸை பாலோ செய்யலாம்.கழுத்து மற்றும் பின்பக்க தலைக்கு இடைப்பட்ட பகுதியில் அழுத்தம் கொடுத்து மசாஜ் செய்யலாம்.கழுத்துப் பகுதியில் வலி ஏற்பட்டாலோ அல்லது தசைகள் சோர்வடைந்தாலோ சிறிது நேரம் ஓய்வு கொடுக்க வேண்டும்.
பின்பக்க கழுத்துப் பகுதியில் உள்ள தசைகள் வலிமையடைய உடற்பயிற்சி செய்யலாம்.கழுத்துப் பகுதியில் வலி ஏற்பட்டால் குளிர் பேக் அல்லது ஹாட் பேக் கொண்டு அழுத்தம் கொடுக்கலாம்.போதிய தூக்கத்தை அனுபவித்தால் பின்பக்க கழுத்து வலி குணமாகும்.அதிக நேரம் குனிந்த நிலையில் வேலை பார்ப்பதை தவிர்க்க வேண்டும்.அடிக்கடி பின்பக்க கழுத்துப் பகுதியை கைகளை கொண்டு அழுத்தம் கொடுக்க வேண்டும்.
அதேபோல் வெது வெதுப்பான தண்ணீரில் காட்டன் துணியை நினைத்து கழுத்துப் பகுதியில் வைத்து அழுத்தம் கொடுத்தால் வலி மற்றும் தசைப்பிடிப்பு நீங்கும்.பின்பக்க தலை மற்றும் கழுத்துப் பகுதிக்கு இடையில் ஐஸ்பேக் வைத்தால் தலைவலியில் சுளீரென்று வலிப்பது குறையும்.