நமது உடலின் மிகப்பெரிய உள்ளுறுப்பாக திகழும் கல்லீரலில் படிந்து கிடக்கும் அழுக்கு மற்றும் கொழுப்பு கழிவுகளை அகற்ற இலவங்கப்பட்டை,பூண்டு,இஞ்சி மற்றும் மேலும் சில பொருட்களை கொண்டு பானம் செய்து குடிக்கலாம்.
தேவையான பொருட்கள்:-
1)இலவங்கபட்டை
2)பூண்டு
3)இஞ்சி
4)எலுமிச்சை சாறு
5)தேன்
6)மஞ்சள் தூள்
செய்முறை விளக்கம்:-
முதலில் ஒரு துண்டு பட்டை எடுத்து பாத்திரம் ஒன்றில் போட வேண்டும்.பிறகு அதில் ஒரு கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்க வேண்டும்.
அடுத்து ஒரு பல் பூண்டை தோல் நீக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.அதன் பிறகு ஒரு துண்டு இஞ்சையும் தோல் நீக்கிவிட்டு பட்டை தண்ணீரில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
இந்த கலவை நன்றாக கொதித்து வந்த பின்னர் அடுப்பை அணைத்துவிட வேண்டும்.அதன் பிறகு இளஞ்சூடு பக்குவம் வந்த பின்னர் இதை கிளாஸ் ஒன்றிற்கு வடிகட்ட வேண்டும்.
பிறகு ஒரு எலுமிச்சம் பழத்தை அதில் பிழிந்துவிட வேண்டும்.அதன் பிறகு ஒரு தேக்கரண்டி தேன் மற்றும் சிட்டிகை அளவு மஞ்சள் தூள் சேர்த்து மிக்ஸ் செய்து குடித்தால் கல்லீரல் கழிவுகள் அடித்துக் கொண்டு வெளியேறும்.
தேவையான பொருட்கள்:-
1)எலுமிச்சை சாறு
2)தண்ணீர்
3)இஞ்சி
செய்முறை விளக்கம்:-
முதலில் ஒரு கிளாஸ் தண்ணீரை பாத்திரம் ஒன்றில் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.பிறகு அதில் ஒரு துண்டு இஞ்சை தோல் நீக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.
இஞ்சி பானம் கொதித்து வந்த பின்னர் அடுப்பை அணைத்துவிட வேண்டும்.பின்னர் இதை கிளாஸிற்கு வடிகட்டி ஒரு தேக்கரண்டி அளவிற்கு எலுமிச்சை சாறு பிழிந்து குடிக்க வேண்டும்.இப்படி செய்தால் கல்லீரல் கொழுப்பு கரையும்.