பொதுமக்கள் கவனத்திற்கு!! மே 1 முதல் மாறப்போகும் பேங்க் ரூல்ஸ்!!

Photo of author

By Gayathri

பொதுமக்கள் கவனத்திற்கு!! மே 1 முதல் மாறப்போகும் பேங்க் ரூல்ஸ்!!

Gayathri

மே மாதம் 1 ஆம் தேதி முதல் இந்தியாவில் இருக்கக்கூடிய அனைத்து வங்கிகளிலும் சில முக்கிய நடைமுறைகள் மாற்றங்களை சந்திக்கப் போகிறது. பல வங்கிகள் குறிப்பிட்ட அப்டேட்களோடு நிதி நடவடிக்கைகளையும் பாதிக்கும். எனவே பண பரிவர்த்தனை, ஆன்லைன் பேமெண்ட் உரைகள் போன்றவற்றை மேற்கொள்ளும் பொழுது அதிக அளவு கவனம் தேவை.

 

மே 1 முதல் அமலுக்கு வரும் புதிய விதிமுறைகள் :-

 

✓ UPI பரிவர்த்தனைகளில் 5000 ரூபாய்க்கு மேல் செய்யக்கூடிய அனைத்து பரிவர்த்தனைகளுக்கும் 0.5% வரை கட்டணம் வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

 

✓ QR கோட் ஸ்கேன் செய்து பணம் செலுத்தும் பொழுது எந்தவிதமான சேவை கட்டணமும் கேட்கப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

 

✓ வங்கி வேலை நேரமானது காலை ஒன்பது முப்பது மணி முதல் மாலை 4:30 மணி வரை செயல்படும் என்றும் மதிய உணவு இடைவேளை 1.30 மணி முதல் 2 மணி வரை இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சனிக்கிழமை நாட்களில் அரைநாள் வங்கிகள் திறந்திருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

✓ 10,000 ரூபாய்க்கு மேல் இருக்கக்கூடிய காசோலைகள் பவுன்ஸ் ஆகும் பட்சத்தில் 500 முதல் 1500 வரை அபராதம் விதிக்கப்படும் என்றும் இது பயனர்களுடைய கிரெடிட் ஸ்கோரை சேதப்படுத்துவதோடு இதுபோன்ற நிகழ்வுகள் மீண்டும் மீண்டும் ஏற்பட்டால் வங்கிகள் பயனர்களின் உடைய கணக்குகளை மூடுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

 

✓ 20000 வரையிலான சிறிய தனிநபர் கடன் களை பெறுவதற்கு ஒப்புதல் நேரம் தற்பொழுது மிகவும் குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி ஆதார் அட்டையின் உடைய otp சரிபார்ப்பு அடிப்படையில் சிறிய தனிநபர் கடன்கள் வழங்கப்பட இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.