ஏப்ரல் 22 ஆம் தேதி அன்று காஷ்மீர் பகுதியில் உள்ள பஹல்காம் பகுதியில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்திருப்பது குறித்தோ 12 பேர் காயமடைந்திருப்பது குறித்தோ பேசாமல் கர்நாடக முதலமைச்சர் சிதராமையா பயங்கரவாத தாக்குதலுக்கு இந்தியாவினுடைய பாதுகாப்பு கவன குறைவு தான் காரணம் எனக் கூறியிருப்பது இந்திய மக்களிடையே மிகப்பெரிய அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவினுடைய பாதுகாப்பு கவன குறைவுதான் இது போன்ற ஒரு தாக்குதலுக்கு காரணம் என்றும் இதற்காக பாகிஸ்தானுடன் இந்தியா போர் நடத்த தேவையில்லை என்றும் இருநாட்டினுடைய அமைதி காக்கப்பட வேண்டும் என்றும் கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்திருப்பது இந்தியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் பாகிஸ்தான் ஊடகங்கள் அவரை கொண்டாடி வருகின்றன. பயங்கரவாதிகளை கண்டித்து ஒரு வார்த்தை கூட பேசாத சித்தராமையா பாகிஸ்தானுக்கு ஆதரவாக தான் செயல்பட்டு வருகிறார் என பாஜகவின் ஐடி விங் தலைவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்தியர்களைக் கொன்ற பயங்கரவாதிகளுக்கு எதிராக பேசுவதற்கு பதிலாக நாட்டினுடைய பாதுகாப்பின் குறைபாடு இருப்பதாக கூறியதோடு, பாகிஸ்தானுடன் இந்தியா அமைதியை ஏற்படுத்துவதற்காக பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றுகூறியிருப்பது பாகிஸ்தானுக்கு ஆதரவாக இவர் நிற்கிறார் என்பதை நிரூபிப்பது போல் உள்ளதாகவும் இதனை நிரூபிக்கும் வகையில் பாகிஸ்தான் ஊடகங்கள் இவரை கொண்டாடி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். குறிப்பாக சித்தராமையா அவர்களை துரோகி என சுட்டிக்காட்டி மத்திய அரசு அவர் மீது நடவடிக்கை எடுத்தே தீர வேண்டும் என்றும் கூறியிருக்கிறார். குறிப்பாக கர்நாடக முதல்வர் சித்தராமையா அவர்கள் கர்நாடகாவில் இருக்கக்கூடிய பாகிஸ்தானியர்களின் எண்ணிக்கை தனக்கு தெரியாது எனக் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.