கோடை விடுமுறை துவங்கியிருக்கக் கூடிய நிலையில் பள்ளி மாணவர்களுக்கு மற்றும் கோடை வெயில் காரணமாக சுற்றுலா செல்ல முடிவெடுத்திருக்க கூடியவர்களுக்கு ஒரு அருமையான வாய்ப்பை அரசு போக்குவரத்துக் கழகம் வெளியிட்டிருக்கிறது.
கோடை விடுமுறை துவங்கியதால் ரயிலில் முன்பதிவுகள் வேகமாக முடிவடைந்த நிலையில் மக்கள் பலரும் அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் தங்களுடைய சொந்த ஊர்களுக்கான பயணங்களை முன்பதிவு செய்து வருகின்றனர். இதனால் தமிழக அரசு போக்குவரத்து கழகம் ஆனது முன்பதிவு செய்து பயணிக்க கூடிய பயணிகளுக்கு கோடைகால ஆஃப்ராக ஒரு வருடத்திற்கு இலவச பயணம் மேற்கொள்வதற்கான அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது.
தமிழக போக்குவரத்து கழகம் தரப்பில் இது குறித்து தெரிவிக்கப்பட்டிருப்பதாவது :-
ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் ஜூன் 15 ஆம் தேதி வரை அரசு போக்குவரத்துக் கழகத்தில் முன்பதிவு செய்து பயணிக்க கூடிய பயணிகளின் பெயர்களை கணினி மூலமாக குழுக்கள் முறையில் தேர்வு செய்து அவர்களுக்கு ஒரு வருடத்திற்கான இலவச பயணம் வழங்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்ந்தெடுக்கப்படக்கூடிய 75 நபர்களுக்கு 3 பிரிவுகளாக பரிசுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
✓ முதலில் தேர்ந்தெடுக்கப்படும் 25 நபர்களுக்கு ஒரு வருடத்தில் 20 முறை இலவசமாக பயணிக்கலாம் என்றும் அதற்கான கால அளவு ஜூலை 1 2025 முதல் ஜூன் 30 2026 வரை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
✓ இரண்டாவதாக தேர்ந்தெடுக்கப்பட கூடிய 25 நபர்களுக்கு ஒரு வருடத்தில் 10 முறை இலவசமாக பயணம் செய்வதற்கான வாய்ப்பு வழங்கப்படும் என்றும் அதற்கான கால அளவு ஜூலை 1 2025 முதல் ஜூன் 30 2026 வரை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
✓ கடைசியாக தேர்வு செய்யப்படக்கூடிய 25 நபர்களுக்கு ஒரு வருடத்தில் 5 முறை இலவசமாக பயணம் செய்வதற்கான வாய்ப்பு வழங்கப்படும் என்றும் இதற்கான கால அளவு ஜூலை 1 2025 முதல் ஜூன் 30 2026 வரை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பு :-
தமிழக அரசு போக்குவரத்து கழகத்தின் கீழ் இருக்கக்கூடிய பேருந்துகளில் பயணம் செய்ய முன்பதிவு செய்யக்கூடிய பயணிகள் www.tnstc.in என்று அதிகாரப்பூர்வ இணையதளத்தின் கீழ் சென்று தங்களுடைய டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.