கருத்தரித்த பெண்கள் கருவில் வளரும் குழந்தையின் மூளை வளர்ச்சியை அதிகரிக்க ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை அவசியம் சாப்பிட வேண்டும்.கருத்தரித்த பெண்கள் தங்கள் குழந்தையின் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்த வேண்டும்.
குறிப்பாக குழந்தையின் மூளை வளர்ச்சியை அதிகரிக்கும் உணவுகளை உட்கொள்ள வேண்டும்.புரதம்,ஒமேகா 3 கொழுப்பு அமிலம் நிறைந்த உணவுகள்,துத்தநாகம் மற்றும் அயோடின் உணவுகளை உட்கொள்ள வேண்டும்.இதுபோன்ற ஊட்டச்சத்து நிறைந்த உணவுகள் கருவில் உள்ள குழந்தையின் மூளை வளர்ச்சியை மேம்படுத்த உதவுகிறது.
கோழி இறைச்சி,ஆட்டிறைச்ச,பால்,முட்டை போன்ற புரதம் நிறைந்த உணவுகளை சாப்பிட்டால் குழந்தையின் மூளை வளர்ச்சி அதிகரிக்கும்.
கீரைகள்,பழங்கள்,முழு தானிய உணவுகளில் வைட்டமின்கள் அதிகளவு நிறைந்து காணப்படுகிறது.இவற்றை சாப்பிட்டு வந்தால் குழந்தையின் மூளை வளர்ச்சி அதிகரிக்கும்.
ஒமேகா 3 கொழுப்பு அமிலம் நிறைந்த உணவுகளை கர்ப்பிணி பெண்கள் சாப்பிட வேண்டும்.மீன்,வால்நட் போன்றவற்றில் ஒமேகா 3 கொழுப்பு அமிலம் அதிகமாகவே நிறைந்திருக்கிறது.கடல் பாசி,அயோடின் நிறைந்த உணவுகளை உட்கொண்டால் குழந்தையின் மூளை வளர்ச்சி மேம்படும்.
தினசரி புரதம்,வைட்டமின்கள்,தாதுக்கள் நிறைந்த உணவுகளை கர்ப்பிணி பெண்கள் சாப்பிட வேண்டும்.அதிக சர்க்கரை மற்றும் உப்பு நிறைந்த உணவுகளை தவிர்க்க வேண்டும்.எண்ணெய் உணவுகள்,கொழுப்பு உணவுகளை குறைவான அளவு மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும்.நீங்கள் எந்தஉணவு எடுத்துக் கொள்வதாக இருந்தாலும் மருத்துவரிடம் உரிய ஆலோசனை பெற வேண்டியது முக்கியம்.
தினமும் ஒரு கிளாஸ் பால் எடுத்துக் கொள்ள வேண்டும்.தினமும் ஒரு முட்டையை வேகவைத்து சாப்பிட வேண்டும்.பாதாம் பருப்பை ஊறவைத்து சாப்பிட வேண்டும்.வால்நட்டை தேனில் ஊறவைத்து சாப்பிட வேண்டும்.ஊறவைத்த ஆளிவிதை,தயிர்,கீரை உணவுகளை சாப்பிட வேண்டும்.இதையெல்லாம் கருவுற்ற பெண்கள் சாப்பிட்டு வந்தால் கருவில் வளரும் குழந்தையின் மூளை வளர்ச்சி அதிகரிக்கும்.