நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.உடலில் இம்யூனிட்டி பவர் குறைந்தால் எளிதில் நோய் வாய்ப்படக் கூடும்.உடலில் இம்யூனிட்டி பவரை அதிகப்படுத்த நாம் ஆரோக்கியமான ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிட வேண்டும்.அது மட்டுமின்றி ஆரோக்கியமான வாழ்க்கைமுறையை பின்பற்ற வேண்டும்.
உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகள்:-
1)பச்சை காய்கறிகள் மற்றும் பழங்களை அதிகமாக உட்கொள்ள வேண்டும்.ஆரோக்கிய கொழுப்பு நிறைந்த உணவுகளை சாப்பிட வேண்டும்.
2)பீட்ரூட்,கேரட் போன்றவற்றை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.தக்காளி பழத்தில் ஜூஸ் செய்து குடிக்கலாம்.
3)மீன்,முட்டை போன்றவற்றை அடிக்கடி சாப்பிட வேண்டும்.பீன்ஸ் மற்றும் பயறு வகைகளை தினந்தோறும் சாப்பிட வேண்டும்.புரதம் நிறைந்த உணவுகளை அதிகமாக உட்கொள்ள வேண்டும்.
4)புரோபயாடிக் நிறைந்த உணவுகளை சாப்பிட வேண்டும்.தயிர்,கெபிர் போன்ற புளிப்பு உணவுகளில் புரோபயாடிக் நிறைந்து காணப்படுகிறது.
5)வைட்டமின் சி சத்து நிறைந்த பழங்களை சாப்பிட வேண்டும்.எலுமிச்சை,ஆரஞ்சு,சாத்துக்குடி போன்ற பழங்களை சாப்பிட வேண்டும்.
6)இஞ்சி,பூண்டு போன்ற நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுப் பொருட்களை சாப்பிட வேண்டும்.
7)உலர் விதைகள்,கொட்டை வகைகள் நோய் எதிர்ப்பு திறனை மேம்படுத்த உதவுகிறது.பன்னீர்,பாலாடைக்கட்டி,பால் பொருட்களை சாப்பிட்டு வாந்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
8)முருங்கை கீரை,முருங்கை காய்,முருங்கை பூ ஆகியவற்றை உணவாக சாப்பிட்டால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.பேரிச்சம் பழம்,சிறுதானிய உணவுகளை உட்கொண்டால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகும்.
இது தவிர தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும்.உடலை நீரேற்றத்துடன் வைத்துக் கொள்ள வேண்டியது முக்கியம்.தினமும் 8 மணி நேரம் நன்றாக உறங்க வேண்டும்.இதையெல்லாம் பின்பற்றி வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.