ஆவாரம் பூ பலவகை மருத்துவ குணங்களை கொண்டிருக்கிறது.இந்த பூவை சாப்பிட்டால் உச்சி முதல் பாதாம் வரையிலான பாதிப்புகள் அனைத்தும் குணமாகும்.
தேவையான பொருட்கள்:-
1)ஆவாரம் பூ – இரண்டு தேக்கரண்டி
2)தண்ணீர் – ஒரு கிளாஸ்
3)தேன் – ஒரு தேக்கரண்டி
செய்முறை விளக்கம்:-
முதலில் ஒரு கைப்பிடி ஆவாரம் பூவை எடுத்து வெயிலில் காய வைத்துக் கொள்ள வேண்டும்.பின்னர் இது ஒரு பாட்டிலில் கொட்டி சேமித்து வைத்துக் கொள்ள வேண்டும்.
அடுத்து பாத்திரத்தை அடுப்பில் வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.பிறகு அதில் இரண்டு தேக்கரண்டி அளவு ஆவாரம் பூவை அதில் போட்டு குறைவான தீயில் கொதிக்க வைக்க வேண்டும்.
பிறகு இந்த ஆவாரம் பூ பானத்தை வடிகட்டி ஒரு தேக்கரண்டி தேன் மிக்ஸ் செய்து குடித்தால் குடல் நச்சுக் கழிவுகள் நீங்கும்.
தேவையான பொருட்கள்:-
1)ஆவாரம் பூ பொடி – ஒரு தேக்கரண்டி
2)தண்ணீர் – ஒரு கிளாஸ்
செய்முறை விளக்கம்:-
உலர்ந்த நிலையில் ஆவாரம் பூ எடுத்து பொடியாக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.பிறகு ஒரு தேக்கரண்டி ஆவாரம் பூ பொடியை பாத்திரத்தில் போட்டுக் கொள்ள வேண்டும்.
அதன் பிறகு ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி குறைவான தீயில் கொதிக்க வைக்க வேண்டும்.இந்த பானத்தை வடிகட்டி குடித்தால் செரிமானப் பிரச்சனை நீங்கும்.குடல் கழிவுகளை வெளியேற்ற ஆவாரம் பூ பானம் பருகலாம்.
ஆவாரம் பூவை பொடித்து சருமத்தில் அப்ளை செய்து குளித்து வந்தால் சருமம் சம்மந்தபட்ட பாதிப்புகள் அனைத்தும் குணமாகும்.ஆவாரம் பூ தேநீர் குடித்து வந்தால் இரத்த சர்க்கரை நோய் குணமாகும்.செரிமானப் பிரச்சனை குணமாக ஆவாரம் பூவில் டீ செய்து குடிக்கலாம்.பாத எரிச்சல் குணமாக ஆவாரம் பூ உட்கொள்ளலாம்.வெயில் காலத்தில் சருமப் பராமரிப்பை மேம்படுத்த ஆவாரம் பூவை உட்கொள்ளலாம்.
ஆவாரம் பூவை பொடித்து மஞ்சள் தூள் கலந்து சருமத்தில் தடவி குளித்தால் தடிப்பு,அரிப்பு,எரிச்சல் போன்ற பாதிப்புகள் குணமாகும்.