பெரியவர்களுக்கு வயது முதுமை காரணமாக மூட்டு வலி தொந்தரவு ஏற்படுவது இயல்பான ஒரு விஷயமாக இருக்கிறது.ஆனால் இளம் வயதில் மூட்டு வலி பிரச்சனை வந்தால் அதை கவனக் குறைவாக எடுத்துக் கொள்ளக் கூடாது.
மோசமான உணவுமுறை பழக்கம்,சோமேறி வாழ்க்கைமுறை,உடல் நலப் பிரச்சனையால் மூட்டு பகுதியில் கடுமையான வலி மற்றும் வீக்கம் ஏற்படுகிறது.இந்த மூட்டு சம்மந்தப்பட்ட பிரச்சனைகளில் இருந்து மீள கீழே கொடுக்கப்பட்டுள்ள உணவுமுறை பழக்கத்தை பின்பற்றலாம்.
மூட்டு வலிமையை அதிகரிக்கும் உணவுப்பழக்க வழக்கம்:
1)உளுந்து கஞ்சி
தினமும் இரவு நேரத்தில் உளுந்து கஞ்சி செய்து குடித்து வந்தால் மூட்டு வலிமை அதிகரிக்கும்.உளுந்து பருப்பில் இருக்கின்ற கால்சியம் சத்து மூட்டு வலிமையை அதிகரிக்க உதவுகிறது.
2)பிரண்டை துவையல்
வாரம் இருமுறை பிரண்டை சூப்,பிரண்டை துவையல் செய்து சாப்பிட்டு வந்தால் மூட்டு வலிமை அதிகரிக்கும்.மூட்டு வலி,மூட்டு வீக்கப் பிரச்சனை இருப்பவர்கள் அதன் வலிமை அதிகரிக்க பிரண்டையை சாப்பிடலாம்.
3)முடக்கத்தான் சூப்
இந்த கீரையில் சூப் செய்து சாப்பிட்டு வந்தால் மூட்டு வலிமை அதிகரிக்கும்.வயதான பிறகு மூட்டுகள் சம்மந்தபட்ட பாதிப்புகளை சந்திக்காமல் இருக்க முடக்கத்தான் கீரை சாப்பிடலாம்.
4)வாதமடக்கி இலை துவையல்
இந்த இலையில் துவையல் செய்து சாப்பிட்டு வந்தால் மூட்டு சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் வராமல் இருக்கும்.
5)முருங்கை கீரை சூப்
இரும்புச்சத்து நிறைந்து காணப்படும் முருங்கை கீரையை சூப்பாக செய்து சாப்பிட்டால் மூட்டு வலிமை அதிகரிக்கும்.முருங்கை கீரை துவையல்,முருங்கை பொரியல் செய்து சாப்பிட்டு வந்தால் மூட்டு வலிமை அதிகரிக்கும்.