அடிமேல் அடி வாங்கும் ரிஷப் பண்ட்!! LSG பிளேயர்ஸ்க்கு வந்த சோதனை!!

Photo of author

By Gayathri

அடிமேல் அடி வாங்கும் ரிஷப் பண்ட்!! LSG பிளேயர்ஸ்க்கு வந்த சோதனை!!

Gayathri

IPL 2025 : ஐபிஎல் போட்டிகள் தொடங்கிய முதல் லக்னோ சூப்பர் ஜெயிண்ட் அணி குறித்து பலரும் பலவாறு பேசி வருகின்றனர். இவை ஒருபுறம் இருக்க நேற்று முன்தின ஆட்டத்தில் மும்பை வன்கூடா மைதானத்தில் நடைபெற்ற MI VS LSG ஆட்டத்தின் பொழுது 54 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட் அணியை வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற்றது.

 

இந்த நிலையில், அன்றைய ஆட்டத்தில் லக்னோ சூப்பர் செயின்ட் அணியினுடைய பந்துவீச்சாளர்கள் அதிக நேரம் எடுத்துக் கொண்டதாக கூறி LSG அணியினுடைய கேப்டனுக்கு 24 லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது ஐபிஎல் நிறுவனம். ஏற்கனவே தங்கள் அணியினுடைய தோல்வியை குறித்து மணமடைந்து அழக்கூடிய ஒருவராக ரிஷப் பண்ட் இருந்து வரும் நிலையில் இது ரிஷப் பண்டிற்கு மேலும் ஒரு அடியாக அமைந்திருக்கிறது.

 

LSG அணியின் உடைய கேப்டனான ரிஷப் பண்டுக்கு மட்டும் அபராதம் விதிக்காமல் அந்த அணியில் இருக்கக்கூடிய மற்ற வீரர்களுக்கும் அந்த போட்டியினுடைய சம்பளத்திலிருந்து அனைவருக்கும் தனித்தனியாக தலா 6 லட்சம் ரூபாய் அல்லது 25% அபராத தொகை பிடித்தம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது இரண்டில் எந்த தொகை குறைவாக இருக்கிறதோ அதை விளையாட்டு வீரர்கள் கட்ட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.