முன்னாள் தகவல் ஆணையர் மற்றும் பத்திரிக்கையாளரான உதை மற்றும் பிறர் சேர்ந்து தொடர்ந்தால் பொதுநல வழக்கு உச்ச நீதிமன்ற அமர்வில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கினை நீதிபதிகள் பி ஆர் காவாய் மற்றும் ஏஜி மாஷிஷ் இருவரும் இணைந்து சாரணை நடத்தினர்.
விசாரணையின் போது, வழக்கு தொடர்ந்தவர்க்கு சாதகமாக பேசிய வழக்கறிஞர் தனிநபர் தவறாக இருந்த ஒன்று இப்பொழுது பொது பிரச்சனை ஆக உருவெடுத்து இருப்பதாகவும் சமூக வலைதளத்தில் மட்டுமல்லாத ஓட்டிட்டு தலங்கள் வரையில் இன்று அனைத்து டிஜிட்டல் தளங்களிலும் வன்முறை பரவி இருக்கிறது என்றும் இதை ஒழுங்குபடுத்தியே தீர வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். இது போன்ற வன்முறை மற்றும் ஆபாச காட்சிகளால் சமூக மதிப்பீடுகள் மனநலன் மற்றும் பொது பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமைந்திருக்கிறது என்றும் இது போன்ற கண்டன்டுகள் குழந்தைகள் பெண்களுக்கு எதிரான செயல்களில் இளம் வயதினரை ஊக்குவிப்பதாகவும் தெரிவித்திருக்கிறார். குறிப்பாக இந்த மனு வெறும் விளம்பர நோக்கத்தில் போடப்பட்டது அல்ல என்றும் உண்மையான சமூக அக்கறை கொண்டவரின் வெளிப்பாடு என்றும் அந்த வழக்கறிஞர் தெரிவித்திருக்கிறார்.
வாதங்களைக் கேட்ட நீதிபதி தெரிவித்திருப்பதாவது :-
சமூக வலைதளங்கள் மற்றும் ஓ டி டி களங்களில் பரவி இருக்கக்கூடிய இதுபோன்ற வன்முறை மற்றும் ஆபாச வீடியோக்கள் மீது மத்திய அரசு ஏதேனும் சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிபதி காவாய் தெரிவித்து இருக்கிறார். மேலும் ஓட்டியடித்த தலங்கள் மற்றும் சில சமூக வலைதளங்களுக்கு இது குறித்து பதிலளிக்க வேண்டும் என நோட்டஸ் அனுப்ப உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு தரப்பில் பேசிய வக்கீல் இந்த கண்டன்டுகள் மீது சில வரைமுறைகள் வகுக்கப்பட்ட வருவதாக தெரிவித்ததோடு மத்திய அரசு சட்டவரம்புக்கு உட்பட்டு இதன் மீது நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் வாக்குறுதி அளித்திருக்கிறார்.