தமிழகம் முழுவதும் இருக்கக்கூடிய அனைத்து டாஸ்மாக் கடைகளும் மே 1 ஆம் தேதி தொழிலாளர் தினத்தை முன்னிட்டு விடுமுறை விட வேண்டும் என தமிழக அரசு தரப்பில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசினுடைய மதுவிலக்கு ஆயுத தீர்வை துறை மூலமாக தமிழ்நாடு ஸ்டேட் மார்க்கெட்டிங் கார்ப்பரேஷன் என்று அழைக்கப்படக்கூடிய டாஸ்மார்க் தமிழகம் முழுவதும் சில்லறை மதுபான விற்பனையில் ஈடுபட்டு வருகிறது. சில்லறை விற்பனையில் உள்ள டாஸ்மார்க் கடைகள் அனைத்தும் வருகிறதே ஒன்றாம் தேதி அன்று விடுமுறை வழங்க வேண்டும் என்றும் அதனை தொடர்ந்து டாஸ்மார்க் கடைகளோடு இணைந்த மதுக்கூடங்கள் தனியார் பார்கள் நட்சத்திர ஹோட்டல்களில் உள்ள பார்கள் மனம் மகிழ் பார்கள் போன்றவை செயல்படக்கூடாது என்றும் அவற்றிற்கு தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டிருக்கிறது.
ஒவ்வொரு வருடமும் தொழிலாளர் தினத்தை முன்னிட்டு தமிழகத்தில் இருக்கக்கூடிய அனைத்து டாஸ்மாக் கடைகளும் விடுமுறை விடப்படுவதைப் போல இந்த ஆண்டு விடுமுறை தினமாக தமிழக அரசு அறிவித்திருக்கிறது. இதனை மீறி டாஸ்மார்க் கடைகளில் மதுபாட்டில்களை விற்பனை செய்பவர்கள் அல்லது தனியார் ஹோட்டல்களில் மது பாட்டில்களை விற்பனை செய்யக் கூடியவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளனர். வருடத்திற்கு 10 நாட்கள் மதுபான கடைகளுக்கு பொது ஒரு முறையாக அறிவிக்கப்பட்டு இருக்கும் நிலையில் தொழிலாளர் தினம் ஒரு பொது விடுமுறை என்பது குறிப்பிடத்தக்கது.