2025 ஆம் ஆண்டு மே மாதத்தில் இந்தியன் ரிசர்வ் வங்கி அறிவிப்பின்படி இந்தியாவில் இருக்கக்கூடிய அனைத்து வங்கிகளுக்கும் எத்தனை நாட்கள் விடுமுறை விடப்படும் என்பது குறித்த விபரம் அட்டவணையாக வெளியிடப்பட்டுள்ளது.
வங்கிகளுக்கு செல்லக்கூடிய மக்கள் எந்தெந்த நாட்களில் வங்கிகள் செயல்படும் என்பதையும் வங்கிகளில் விடுமுறை நாட்கள் என்ன என்பதையும் அறிந்து அதன்படி தங்களுடைய பண பரிவர்த்தனைகளை மேற்கொள்வதால் கோடை வெயிலில் வங்கிக்கு அடிக்கடி அலைய வேண்டிய தேவை இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியன் ரிசர்வ் வங்கி அட்டவணையின் படி மே மாதத்தில் விடுமுறை நாட்கள் :-
மே 1 – தொழிலாளர் தினம்
மே 4 – ஞாயிறு
மே 9 – வெள்ளிக்கிழமை ( ரவீந்திரநாத் தாகூர் ஜெயந்தி ) தெலுங்கு மாநிலங்களில் உள்ள வங்கிகளுக்கு இந்த விடுமுறை கிடையாது
மே 10 – இரண்டாவது சனிக்கிழமை
மே 11 – ஞாயிறு
மே 12 – புத்த பூர்ணிமா
மே 16 – வெள்ளிக்கிழமை (சிக்கிம் மாநில தினம்)
மே 18 – ஞாயிறு
மே 24 – நான்காவது சனிக்கிழமை விடுமுறை
மே 25 – ஞாயிறு
மே 26 – காஜி நஸ்ருல் இஸ்லாம் பிறந்தநாள் (சிக்கிம் பிராந்திய விடுமுறை)
மே 29 – மகாராணா பிரதாப் ஜெயந்தி ( சில மாநிலங்களில் மட்டுமே விடுமுறை )
இந்திய ரிசர்வ் வங்கி ஆனது தேசிய அளவில் இந்தியாவின் இருக்கக்கூடிய வங்கிகளுக்கான விடுமுறை நாட்களை அட்டவணையாக வெளியிட்டிருக்கிறது. ஆனால் அனைத்து மாநிலங்களிலும் இந்த விடுமுறைகள் முழுவதுமாக பொருந்தாது. ஒவ்வொரு மாநிலங்களுக்கும் உள்ளூர் விடுமுறைகளின் படி சில விடுமுறை நாட்கள் மாறுபடலாம்.