நமது மார்பு பகுதியில் வலி ஏற்பட்டால் அதை மாரடைப்பு என்று கருத வேண்டாம்.மார்பு பகுதியில் ஏற்படும் எல்லா வலிகளும் இதயம் சம்மந்தப்பட்ட பாதிப்பாக இருக்க முடியாது.கழுத்து மற்றும் தோள் பட்டை பகுதியில் ஏதேனும் ஒரு பிரச்சனை இருந்தால் மார்பு பகுதியில் வலி ஏற்படும்.
மார்பு வலிக்கான அறிகுறிகள்:-
1)தோள் பட்டை வலி
2)கழுத்து வலி
3)கழுத்து பகுதியில் கட்டி
4)தூக்கமின்மை
5)மார்பு பகுதியில் அடிபடுதல்
6)மன அழுத்தம்
7)கீல்வாதம்
இது தவிர கெட்ட கொழுப்புக்கு தேக்கம்,நெஞ்சு சளி,நெஞ்சு இறுக்கம்,காய்ச்சல்,தலைவலி போன்ற காரணங்களாலும் மார்பு பகுதியில் வலி ஏற்படும்.அதேபோல் கழுத்துப் பகுதியில் எலும்பு தேய்மானம்,முதுகெலும்பு பகுதியில் தேய்மானம் போன்ற காரணங்களால் மார்பு பகுதியில் வலி ஏற்படுகிறது.கழுத்து அல்லது மார்பு பகுதியில் கட்டிகள் இருந்தால் நெஞ்சு வலி ஏற்படும்.
எனவே நெஞ்சு பகுதியில் வலி ஏற்பட்டால் அது மாரடைப்பிற்கான அறிகுறி என்று தவறாக நினைக்க வேண்டும்.மேலே சொல்லப்பட்டுள்ள காரணங்களும் நெஞ்சு பகுதியில் வலி ஏற்பட முக்கிய காரணமாக இருக்கிறது.
உங்களுக்கு அடிக்கடி மார்பு பகுதியில் வலி ஏற்பட்டால் நீங்கள் மருத்துவரை அணுக வேண்டியது மிகவும் முக்கியமாகும்.மார்பு மற்றும் கழுத்துக்கு இடைப்பட்ட பகுதியில் வலி ஏற்பட்டால் சில பயிற்சிகள் செய்து பாதிப்பை சரி செய்து கொள்ளலாம்.
உங்கள் இரண்டு கைகளையும் மேலே உயர்த்தி பிடித்துக் கொள்ளவும்.பிறகு இடது மற்றும் வலது என்று இரு பக்கங்களிலும் அசைக்க வேண்டும்.இப்படி செய்து வந்தால் மார்பு வலி குணமாகும்.அதேபோல் நல்ல தூக்கத்தை அனுபவிக்க வேண்டும்.மன அழுத்தத்தை கட்டுப்படுத்தி மன ஆரோக்கியத்தை மேம்படுத்த வேண்டும்.இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த பதட்டம்,பயத்தை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.