நமது உணவுகளை எண்ணெய் இல்லாமல் சமைப்பது கடினம்.உணவின் சுவையை கூட்டுவதில் எண்ணெய்க்கு தனி பங்கு இருக்கின்றது.நமது உடலுக்கு எண்ணெய் சத்து அவசியமான ஒன்றாக இருக்கிறது.ஆனால் தற்பொழுது பயன்படுத்தப்படும் எண்ணெய்கள் உடல் ஆரோக்கியத்தை பாதிக்கும் ஒன்றாக இருக்கின்றது.
முன்பெல்லாம் கடலை எண்ணெய்,தேங்காய் எண்ணெய்,நல்லெண்ணெய்,விளக்கெண்ணெய் போன்றவற்றின் பயன்பாடு அதிகமாக இருந்தது.ஆனால் தற்பொழுது சூரிய காந்தி விதை எண்ணெய்,பாமாயில் போன்றவற்றின் பயன்பாடு அதிகரித்துவிட்டது.
இதுபோன்ற எண்ணெயை தொடர்ந்து பயன்படுத்தினால் உடலுக்கு என்னென்ன ஆபத்துகள் ஏற்படும் என்பதை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும்.
1)பாமாயில்,சூரியகாந்தி விதை எண்ணெய் மற்றும் மீண்டும் மீண்டும் சுட்ட எண்ணையை பயன்படுத்தினால் உடலில் கேன்சர் கட்டிகள் உருவாகிவிடும்.
2)இந்த எண்ணையை பயன்படுத்தினால் இதயம் சம்மந்தபட்ட பாதிப்புகள் ஏற்படும்.கெட்ட கொலஸ்ட்ரால் அளவு அதிகரித்து மாரடைப்பு பாதிப்பை உண்டாக்கிவிடும்.
3)இந்த ஆரோக்கியம் இல்லாத எண்ணையை பயன்படுத்தினால் சிறுநீரகம் சம்மந்தபட்ட பாதிப்புகள் ஏற்பட்டுவிடும்.
4)ஆரோக்கியம் இல்லாத எண்ணையை பயன்படுத்தினால் கண் சம்மந்தபட்ட பிரச்சனைகள் அதிகரிக்கும்.
5)சுட்ட எண்ணையை மீண்டும் மீண்டும் பயன்படுத்தினால் குடல் மோசமான பாதிப்புகளை எதிர்கொள்ள நேரிடும்.
6)ஒருமுறை பயன்படுத்திய எண்ணையில் மீண்டும் மீண்டும் சமைத்து உட்கொண்டால் செரிமானம் சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் குணமாகும்.
7)ஆரோக்கியம் இல்லாத எண்ணையில் சமையல் செய்து சாப்பிட்டால் மலச்சிக்கல்,வாயுத் தொல்லை,வயிறு வீக்கம்,வயிறு உப்பசம் போன்ற பாதிப்புகளை சந்திக்க நேரிடும்.