பெரும்பாலான மக்களின் விருப்ப உணவாக அசைவம் இருக்கின்றது.கோழி இறைச்சி,ஆட்டிறைச்சி,மீன் போன்றவை புரதம்,வைட்டமின்கள்,ஒமேகா 3 கொழுப்பு அமிலம் போன்றவை நிறைந்து காணப்படுகிறது.அசைவத்தில் கிரேவி,குழம்பு,வறுவல்,பிரட்டல் என்று பல வகைகள் செய்யப்படுகிறது.
சிலர் தினமும் அசைவ உணவுகளை விரும்பி சாப்பிடுகின்றனர்.அசைவ உணவுகள் வாய் ருசிக்கு நன்றாக இருக்கும்.இருப்பினும் அதை அளவிற்கு அதிகமாக சாப்பிட்டால் அவை உடல் ஆரோக்கியத்தை மோசமாக்கிவிடும்.அசைவ உணவுகள் சிலருக்கு செரிமானப் பிரச்சனை,மலச்சிக்கல்,வயிற்றுப்போக்கு,வயிறு உப்பசம் போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தும்.
அதிக அசைவ உணவுகள் உடலில் கெட்ட கொலஸ்ட்ராலை அதிகரித்துவிடும்.தொடர்ந்து அசைவ உணவுகளை உட்கொண்டால் உடல் பருமன் பிரச்சனையை சந்திக்க நேரிடும்.அசைவ உணவுகளை சூடாக இருக்கும் பொழுதே சாப்பிட்டுவிட வேண்டும்.ஆறிய பிறகு உட்கொண்டால் அவை செரிமானம் சம்மந்தப்பட்ட பாதிப்பை அதிகப்படுத்தும்.
எந்த அசைவ உணவுகளை உட்கொண்டாலும் கூடவே நார்ச்சத்து நிறைந்த உணவுகளை அவசியம் சாப்பிட வேண்டும்.அசைவ உணவுகளை உட்கொண்ட உடனே உறங்கக் கூடாது.அசைவ உணவுகளை நன்றாக மென்று சாப்பிட வேண்டும்.
அசைவ உணவுகளை இரவு நேரத்தில் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.ஒருமுறை சமைத்த அசைவ உணவை மீண்டும் மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.இதனால் குடல் ஆரோக்கியம் மிகவும் மோசமடைந்துவிடும்.
கறி உணவுகளை அதிக எண்ணையில் சமைப்பதை தவிர்க்க வேண்டும்.அதேபோல் கொழுப்பு அதிகமாக உள்ள அசைவ உணவுகளை தவிர்க்க வேண்டும்.நன்றாக வேகவைக்கப்பட்ட அசைவ உணவுகளை மட்டுமே சாப்பிட வேண்டும்.