தினமும் ஒரு பயிறை சாப்பிட்ட்டால் நமக்கு எத்தனை நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?

Photo of author

By Divya

தினமும் ஒரு பயிறை சாப்பிட்ட்டால் நமக்கு எத்தனை நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?

Divya

நம் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்திக் கொள்ள தானியங்கள்,பயறு வகைகளை உட்கொள்ளலாம்.குறிப்பாக பயிறு வகைகளை முளைகட்டி சாப்பிட்டு வந்தால் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கும்.முளைகட்டிய பயிர் சாப்பிட்டு வந்தால் இரத்த சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் இருக்கும்.

செரிமானம் சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் குணமாக முளைகட்டிய பயிறை உட்கொள்ளலாம்.இதய ஆரோக்கியத்தை வலுப்படுத்த முளைகட்டிய பயறை சாப்பிடலாம்.வைட்டமின் கே,கால்சியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் அதிகம் நிறைந்திருக்கும் பயறு வகைகளை சாப்பிட்டு வந்தால் எலும்பு வலிமை அதிகரிக்கும்.

தினமும் ஒரு பயறை முளைகட்ட வைத்து சாப்பிட்டு வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.வயிறுப் புண்,அல்சர் பாதிப்பு இருப்பவர்கள் முளைகட்டிய பயறு சாப்பிடலாம்.உடல் எடையை குறையாக முளைகட்டிய தானியங்கள்,பயறு வகைகளை சாலட்டாக சாப்பிடலாம்.

பச்சை பயறு,கோதுமை,வெந்தயம்,கம்பு,கருப்பு உளுந்து,தட்டை பயறு போன்றவற்றை ஊறவைத்து முளைகட்டி சாப்பிட்டு வந்தால் எலும்பு வலிமை அதிகரிக்கும்.

முளைகட்டிய பயறு சாலட் செய்வது எப்படி?

தேவைப்படும் பொருட்கள்:

1)பச்சை பயறு(முளைகட்டியது) – இரண்டு தேக்கரண்டி
2)வெந்தயம்(முளைகட்டியது) இரண்டு தேக்கரண்டி
3)வெங்காயம்(நறுக்கியது) – இரண்டு தேக்கரண்டி
4)தக்காளி(பொடியாக நறுக்கியது) – ஒன்று
5)சாட் மசாலா – கால் தேக்கரண்டி
6)உப்பு – சிறிதளவு

செய்முறை விளக்கம்:-

கிண்ணம் ஒன்றை எடுத்து முளைகட்டிய பச்சை பயறு,வெந்தயம் ஆகியவற்றை அதில் போட்டுக் கொள்ள வேண்டும்.அடுத்து நறுக்கிய வெங்காயம் மற்றும் தக்காளி பழத்தை அதில் போட்டு மிக்ஸ் செய்ய வேண்டும்.

அதன் பிறகு கால் தேக்கரண்டி அளவு சாட் மசாலா சேர்த்து மிக்ஸ் செய்ய வேண்டும்.அடுத்து அதில் சிறிதளவு உப்பு கலந்து சாப்பிட்டால் உடல் ஆரோக்கியம் மேம்படும்.